Chennai Open WTA 250: ‘WTA 250’ அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடர், முதலிரண்டு நாள்கள் (அக். 27, அக். 28) மழையால் ரத்தானது. அதைத் தொடர்ந்து, ஒற்றை பிரிவு, இரட்டையர் பிரிவின் போட்டிகள் நேற்று முன்தினம் (அக். 29) தொடங்கின.
Add Zee News as a Preferred Source
முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் ஸ்ரீவள்ளி பாமிடிபாட்டி, சகாஜா யமலப்பள்ளி ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர். இந்திய வீராங்கனைகள் வைஷ்ணவி அத்கர், மாயா ராஜேஷ்வரன் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினர். இதில் மாயா ராஜேஷ்வரன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, இரண்டாம் சுற்று ஒற்றையர் போட்டிகள் மற்றும் மீதமுள்ள முதல் சுற்று இரட்டையர் போட்டிகள் நேற்று நடைபெற்றன. அந்த வகையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீவள்ளி பாமிடிபாட்டி, சகாஜா யமலப்பள்ளி ஆகியோர் தோல்வியை தழுவி WTA 250 சென்னை ஓபன் தொடரில் தங்களின் பயணத்தை முடித்துக்கொண்டனர்.
From edge-of-the-seat rallies to roaring comebacks, the nail-biting action finally comes to an end at the WTA250 Chennai Open
The results are in, but the thrill still lingers!@CMOTamilnadu@Udhaystalin@TNDIPRNEWS#SportsTN #TalentSDAT… pic.twitter.com/q3EqAxkg0j
— Sports Tamil Nadu (@SportsTN_) October 30, 2025
முதல் சுற்றில் இந்தோனேசியாவின் பிரிஸ்கா நுக்ரோஹோவை வீழ்த்தி சிறப்பாக துவங்கிய சகாஜா, இரண்டாவது சுற்றில் குரோஷிய வீராங்கனை டொன்னா வேகிச்சிடம் 2-6, 2-6 என நேரடியான செட்களில் தோல்வியடைந்தார். தொடக்கத்தில் சர்வீஸில் நன்றாக இருந்தாலும், நெட்பிளே தவறுகள் காரணமாக அவளது ஆட்டம் சீர்குலைந்தது. ஒலிம்பிக் வெள்ளி பதக்கம் பெற்ற வேகிச்சு, “சகாஜா தொடக்கத்தில் நன்றாக விளையாடினார், ஆனால் நான் தாக்கத்துடன் சென்றது பயனளித்தது” என்றார்.
தொடர்ந்து, ஸ்ரீவள்ளி பாமிடிபாட்டி ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பெரெல்லிடம் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு 5-7, 6-7(2) என தோல்வியடைந்தார். இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நீண்ட போட்டியில் ஸ்ரிவல்லி 12 ஏஸ்களை அடித்தாலும், முக்கிய தருணங்களில் நிலைத்தன்மை குலைந்தது.
ஒரு கட்டத்தில் 2-5 என பின்தங்கியிருந்த அவர் 5-5 என சமநிலை கொண்டுவந்தார். ஆனால் பெரெல் அனுபவத்தை பயன்படுத்தி, டைபிரேக்கரில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். நடம்பு சாம்பியன் லிண்டா ஃப்ரூஹ்விர்டோவா கூட இரண்டாவது சுற்றிலேயே வெளியேறினார். இந்தோனேசியாவின் ஜானிஸ் ஜென் அவரை 6-2, 3-6, 4-6 என வீழ்த்தினார். இதன்மூலம், சென்னையில் நடைபெறும் WTA 250 தொடரில் இந்திய வீராங்கனைகளின் பயணம் நேற்றுடன் நிறைவடைந்தது.
மேலும் படிக்க | இந்தியா vs ஆஸ்திரேலியா: “அரைகுறை ராணாவை நம்பி”.. விளாசிய முன்னாள் வீரர்!
மேலும் படிக்க | இந்தியாவே கொண்டாடும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் – இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு?
மேலும் படிக்க | இந்தியா – ஆஸ்திரேலியா 2வது டி20: இந்தியாவின் பிளேயிங் 11.. குல்தீப் யாதவ் நீக்கம்?
About the Author
                  
                  Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More
