 
                                  
காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மசனகுடி பகுதியை சேர்ந்தவர் சிவநஞ்சம்மாள். இவர் அங்குள்ள ஏரி பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த காட்டு யானை ஒன்று அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டு தாக்கியுள்ளது.
இதனை கண்ட பொதுமக்கள் சத்தம் போட்டு யானையை விரட்டி உள்ளனர் கோபத்தில் அங்கிருந்த ஓடிய யானை கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த சிவநஞ்சம்மாளை தாக்கியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த வனத்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
