டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தில் ஏற்கனவே 9.2 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது மீதமுள்ள பங்குகளையும் கைப்பற்றி மொத்தமாக 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு முன் வந்துள்ளார். மேலும் ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்கு தயார் என்றும் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் சுமார் 41-43 பில்லியன் டாலர் வரையிலான தொகையை முதலீடு செய்து டிவிட்டரை மொத்தமாகக் கைப்பற்ற திட்டமிடுகிறார் எலான் மஸ்க்..
ஆனால் இந்த அறிவிப்பு டிவிட்டர் ஊழியர்களை மத்தியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால்-ஐ கடுப்பாக்கியுள்ளது.
இந்திய நிறுவனங்களை பாதிக்கும் இலங்கை பொருளாதார நெருக்கடி.. எப்படி..?

எலான் மஸ்க்
எலான் மஸ்க்-இன் இந்த 41 பில்லியன் டாலர் ஆஃபர் குறித்து ட்விட்டர் தலைவர் பிரட் டெய்லர் உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் ஊழியர்கள் மத்தியில் அதிகளவிலான சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.

ஸ்லாக் விவாதம்
இதன் எதிரொலியாக டிவிட்டர் நிறுவன ஊழியர்கள் மத்தியில் மட்டுமே இயங்கும் நிறுவன சேட் சேவையான ஸ்லாக்-ல் பல கேள்விகளை இந்நிறுவன ஊழியர்கள் எழுப்பினர். இதில் சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்தார் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வான பராக் அகர்வால்.

டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால்
இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் நடந்த முக்கியமான கூட்டத்தில் டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால், எலான் மஸ் கொடுத்த 41 பில்லியன் டாலர் ஆஃபர் கொடுத்துள்ளது மூலம் டிவிட்டர் பணயக் கைதி இல்லை. தற்போது நிறுவனத்தின் ஊழியராக அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

41 பில்லியன் டாலர்
தற்போது எலான் மஸ் கொடுத்துள்ள 41 பில்லியன் டாலர் அல்லது ஒரு பங்கு 54.20 டாலர் ஆஃபரை நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது. டிவிட்டர் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு எது சிறந்ததோ, அதை நிர்வாகம் முடிவு செய்தும்.

எலான் மஸ்க் தான் பிரச்சனை
இதேபோல் ஊழியர்களின் கருத்தை முன்னிறுத்த நிர்வாகக் குழுவில் பங்குதாரர்கள் உள்ளனர் என்றும் பராக் அகர்வால் கூறியதாகத் தெரிகிறது.
பொதுவாக இதுப்போன்ற நிறுவன கைப்பற்றல் திட்டம் அறிவிக்கப்பட்டால் மகிழ்ச்சி பொங்கும், ஆனால் எலான் மஸ்க் என்பதால் மட்டுமே கடுமையான எதிர்ப்பு உருவாகியுள்ளது.

சுதந்திர பேச்சு
எலான் மஸ்க்-ன் 43 பில்லியன் டாலர் அறிவிப்பும், சுதந்திர பேச்சு குறித்து அவருடைய நிலைப்பாடு, சமுக வலைத்தளத்தை மொத்தமாக மாற்ற உள்ளது என்றால் மிகையில்லை. தற்போது எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளைக் கைப்பற்றினால் அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்றப்படும்.

டிவிட்டர் பங்குகள்
எலான் மஸ்க் அறிவிப்பு பின்பு டிவிட்டர் பங்குகள் 45.42 டாலரில் இருந்து 48.36 டாலர் வரையில் உயர்ந்தது, ஆனால் வர்த்தக முடிவில் 4.69 சதவீதம் சரிந்து 45.08 டாலராகச் சரிந்துள்ளது. இந்தக் கடுமையான சரிவுக்குப் பின் டிவிட்டர் ஊழியர்களின் சலசலப்பு முக்கியமானதாக உள்ளது.
Twitter is not hostage by Elon Musk $41 billion offer says Parag Agrawal
Twitter is not hostage by Elon Musk $41 billion offer says Parag Agrawal டிவிட்டர் பணயக்கைதியல்ல.. எலான் மஸ்க் அறிவிப்பால் கடுப்பான பராக் அகர்வால்..!