
ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன்
‛டாக்டர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். தொடர்ந்து சூர்யா உடன் இவர் நடித்த எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. அடுத்து சிவகார்த்திகேயன் உடன் டான் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று வரும் இவர் அடுத்து ரஜினி படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ராஜேஷ் எம் இயக்கும் ஒரு படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். இது இவரின் 30வது படமாக உருவாகிறது. இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க போவதாக தகவல் வெளியான நிலையில் இப்போது பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.