இந்தியாவில் உள்ள முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் ஆதார் கார்டு, பல முக்கிய பணிகளுக்கு அவசியமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக வங்கிக் கணக்கு முதல் கொண்டு வருமான வரி தாக்கல் வரையில் அவசியமான ஒன்றாக உள்ளது.
இத்தகைய அவசியமான ஆவணமான ஆதார் கார்டில் மொபைல் நம்பர், மெயில் ஐடி என பல விவரங்களும் அவசியம் கொடுக்க வேண்டிய விவரங்களாக உள்ளன.
உங்களது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் இருந்தாலே போதும்? எளிதில் அதில் செய்ய வேண்டிய அப்டேட்களை செய்து கொள்ளலாம்.
அப்டேட் செய்துள்ளீர்களா?
ஆனால் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் , அனைவரும் ஆதார் கார்டில் மொபைல் நம்பரை அப்டேட் செய்திருக்கிறார்களா என்றால் இல்லை. மேலும் உங்களது மொபைல் நம்பர் ஒன்றை அப்டேட் செய்து விட்டு, அதன்பிறகு வேறு நம்பருக்கு மாறியிருக்கலாம். ஆனால் அதார் கார்டில் அதனை மாற்றியிருக்க மாட்டோம். அவ்வாறு மாற்றாமல் இருந்தால், அதன் மூலம் மோசடி நடக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

அடிக்கடி பாருங்கள்
ஆக அடிக்கடி உங்கள் ஆதாருடன் எந்த நம்பரை இணைத்துள்ளீர்கள், மெயில் ஐடி என்ன கொடுத்துள்ளீர்கள், மற்ற முக்கிய விவரங்கள் என்ன? என்பதை செக் செய்து கொள்ள வேண்டும். ஆக இதன் மூலம் தவறுகள் நடக்காமல் தடுக்க முடியும். மேலும் நீங்கள் கொடுத்த மொபைல் எண் தான் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அல்லது வேறு ஏதேனும் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும்.

எப்படி செக் செய்வது?
இதற்காக நீங்கள் அதிகாரப்பூர்வ தளமான https://myaadhaar.uidai.gov.in/verify-email-mobile என்ற தளத்திற்கு சென்று, லாகின் செய்து கொள்ளவும்.
அதில் verify Mobile number or verify Email address என்பதை தேர்தெடுக்கவும்.
உங்களது ஆதார் நம்பர் அல்லது இமெயில் ஐடியினை கொடுக்கவும்.
கேப்ட்சா- ஐ உள்ளிட்டு ஓடிபி-யை பதிவிடவும்.
உங்களது மொபைல் எண் அல்லது மின்னஞ்சலுக்கு ஓடிபி வந்தாலே, உங்களது மொபைல் எண் அல்லது மெயில் ஐடி சரியாக இணைக்கப்பட்டுள்ளது என அர்த்தம்.

பாஸ்வேர்டு வரவில்லை?
ஒரு வேளை சரியாக மொபைல் எண் கொடுக்காவிட்டால், உங்களது மொபைல் எண்ணுக்கோ அல்லது மெயில் ஐடி-க்கோ பாஸ்வேர்டோ வராது.
ஆக இதன் மூலம் ஆன்லைன் மால்வேர் மோசடிகள் இதன் மூலம் தடுக்க முடியும். வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் இதன் மூலம் கண்டறிய முடியும்.
Aadhaar card: UIDAI gives four simple steps to verify mobile number and mail ids
Aadhaar card: UIDAI gives four simple steps to verify mobile number and mail ids/ஆதார் கார்டு: எந்த மொபைல் நம்பர் இருக்கு.. என்ன மெயில்..எப்படி வெரிபை செய்வது?