விருத்தாசலத்தில் சாலையோரத்தில் குவியலாக கொட்டப்பட்ட காலாவதியான ரவை, மைதா, கோதுமை பாக்கெட்டுகள்.!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சாலையோரத்தில், காலாவதியான ரவை, மைதா, கோதுமை பாக்கெட்டுகள் குவியலாக கொட்டப்பட்டுள்ளன.

விருத்தாசலம் – சேலம், விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் – எருமனூர் புறவழி சாலையோரம் தொடர்ந்து காலாவதியான மருந்து, உணவு பொருட்கள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காலாவதியான உணவு பொருட்களை முறையாக அழிக்கப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.