புதுடெல்லி: ரூ.25 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் கடந்த 2019ம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுத்தப்பட்டது. தற்போது ஜெட் ஏர்வேசை ஜலான்- கல்ராக் கன்சோர்டியம் என்ற அமைப்பு ஏற்று நடத்துகிறது. இந்த நிறுவனம் மீண்டும் விமானங்களை இயக்க திட்டமிட்டு உள்ளது. கடந்த 5ம் தேதி, தங்களது முதல் சோதனை ஓட்டத்தை நடத்தியதைத் தொடர்ந்து, ஒன்றிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த 6ம் தேதி, அந்நிறுவனத்திற்கு பாதுகாப்பு அனுமதி சான்றிதழை வழங்கியுள்ளது.
