இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க 4ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பு! தமிழகஅரசு

சென்னை: பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்ப 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும், இலங்கை மக்களுக்காக, 80 கோடி ரூபாயில் 40,000 டன் அரிசியும், 28 கோடி ரூபாய் மதிப்பில் உயிர் காக்கக்கூடிய 137 மருந்துப் பொருட்களும், 15 கோடி ரூபாய் மதிப்பிலான குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்பவுடரும் வழங்கத் தமிழக அரசு முனைப்புடன் இருப்பதாக முதல்வர் சட்டமன்றத்திலேயே பேசினார். இதைத்தொடர்நது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது சொந்த நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் தருவதாகவும் உறுதியளித்தார். இதே போல திமுக  உள்ளிட்ட பல்வேறு கட்சி நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை இலங்கை மக்களுக்கு வழங்கினர். பல்வேறு நிறுவனங்களும் உதவி செய்து வருகின்றன.

இந்த நிலையில்,   இலங்கைக்கு உதவிப் பொருட்களை அனுப்ப 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.அதன்படி,  வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை செயலர் ஜெசிந்தா, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் பிரபாகர் குழுவில் உள்ளனர். ஆவின் மேலாண் இயக்குநர் சுப்பையன், மருந்து கொள்முதல் இயக்குநர் ஆகியோரும் இந்த 4 பேர்  குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.