கருந்துளைகள், முடிவற்ற இருளுக்கு பெயர் பெற்றவை, ஒளியைக் கூட அவற்றின் வழியாகச் செல்ல அனுமதிக்காத வெற்றிடமானது, பிரபஞ்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும்.
கருந்துளையில் இருந்து வரும் ஒலிகளை வெளியிடுவதால், நாசாவில் உள்ள பொறியாளர்கள் இந்த முடிவற்ற வெற்றிடத்திற்கு இப்போது புதிய அடையாளத்தை வழங்கியுள்ளனர். கருந்துளையால் அனுப்பப்படும் அழுத்த அலைகளை பொறியாளர்கள் ஒலிக் குறிப்புகளாக மாற்றியுள்ளனர்.
உண்மையில் கருந்துளையால் வெளியிடப்பட்ட அலைகளை மனிதர்களால் கேட்க முடியாது. எனவே, புதிய சோனிஃபிகேஷன் முறைகளைப் பயன்படுத்தி, நாம் கேட்கக்கூடிய சிற்றலைகளிலிருந்து ஒலிகளை உருவாக்க முடிந்தது என்று நாசா கூறுகிறது.
நாசா அதன் சந்திரா எக்ஸ்ரே ஆய்வகத்தால் பதிவு செய்யப்பட்ட வானியல் தரவுகளைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறது. சந்திரா சுற்றுப்பாதை ஆய்வகம் உலகின் மிக சக்திவாய்ந்த எக்ஸ்ரே தொலைநோக்கி ஆகும்.
ஆய்வு செய்யப்பட்ட கருந்துளைகளில் ஒன்று பெர்சியஸ் கேலக்ஸி கிளஸ்டர் மையத்தில் உள்ளது. பெர்சியஸ் கிளஸ்டர் நூற்றுக்கணக்கான விண்மீன் திரள்களின் தாயகமாகும். அவை பூமியிலிருந்து 240 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன.
கருந்துளைகளின் இருப்பு சுற்றியுள்ள சூழலை தீவிர வழிகளில் பாதிக்கிறது. ஆனால் பிளாக் ஹோல்களை கேமரா மூலம் படம்பிடிப்பது எளிதல்ல. ஏனென்றால் அவை அடர்த்தியான தூசி மற்றும் மிகவும் வெப்பமான வாயுக்களால் சூழப்பட்டுள்ளன.
பெர்சியஸ் கேலக்ஸி கிளஸ்டரின் மையத்தில் ஆழமான கருந்துளை’ ஒலியுடன் இணைக்கப்பட்டிருப்பதை 2003 இல் கண்டுபிடித்ததாக நாசா கூறுகிறது. கருந்துளையால் அனுப்பப்பட்ட “அழுத்த அலைகள்” கிளஸ்டர் வெப்ப வாயுவில் சிற்றலைகளை ஏற்படுத்துவதாகவும், அந்த சிற்றலைகளை ஒலியின் குறிப்பாக மொழிபெயர்க்க முடியும் என்று வானியலாளர்கள் முன்பே கண்டறிந்தனர்.
ஆனால் அந்தக் குறிப்பு மனிதர்களால் கேட்க முடியாத மிகக் குறைந்த வரம்பில் இருந்தது. எனவே புதிய சோனிஃபிகேஷன் முறைகளைப் பயன்படுத்தி, நாம் கேட்கக்கூடிய சிற்றலைகளிலிருந்து ஒலிகளை உருவாக்க முடிந்தது என்று நாசா கூறுகிறது.
விண்வெளியில் ஒலி இல்லை என்ற தவறான கருத்து உள்ளது என்று நாசா விளக்குகிறது. பெரும்பாலான இடங்கள் வெற்றிடத்தில் இருப்பது உண்மைதான், அதாவது வெளிப்புற நிகழ்வுகள் அல்லது தாக்கங்களிலிருந்து அது பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கேலக்ஸி கிளஸ்டரில் உள்ள பல விண்மீன் திரள்களைச் சுற்றி பெரிய அளவிலான வாயுக்கள் உள்ளன. இது, “ஒலி அலைகள் பயணிக்க ஒரு ஊடகத்தை வழங்குகிறது” என்று நாசா கூறுகிறது.
பெர்சியஸ் கருந்துளையின் புதிய சோனிஃபிகேஷனுக்காக, நாசா குழு கடந்த காலத்தில் சேகரித்த ஒலி அலைகளைப் பயன்படுத்தியது.
விண்வெளி நிறுவனம் 2019 இல் பிரபலமான கருந்துளையின் புதிய சோனிஃபிகேஷன் ஒன்றையும் வெளியிட்டது. அந்த கருந்துளை பூமியில் இருந்து சுமார் 55 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மெஸ்ஸியர் 87 விண்மீன் மண்டலத்தின் மையத்தில் உள்ளது.
நாசாவின் பிளாக் ஹோல் வாரத்தின் ஒரு பகுதியாக இந்த கருந்துளை ஒலிகள் வெளியிடப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“