மதுரை அருகே கண்டெடுக்கப்பட்ட கி.பி.1665ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு

மதுரை அருகே கி.பி.1665ஆம் ஆண்டு கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டம் அருகே S.பெருமாள்பட்டி என்ற ஊரில் உள்ள வயலில் சுமார் 5 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட ஒரு பெரிய கல்லில் எழுத்து பொறிப்பு உள்ளதை வரலாற்று ஆர்வலர் அருண்சந்திரன் என்பவர் தனது கள ஆய்வில் கண்டறிந்தார். இந்த கல்வெட்டு குறித்து மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தில் உள்ள கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் அக் கல்வெட்டை மூத்த கல்வெட்டு வல்லுநர் சாந்தலிங்கம் உதவியுடன் படி எடுத்து படிக்கப்பட்டதில் இக்கல்வெட்டானது சாலிவாகன சகாபத் ஆண்டு 1587ல் பொறிக்கப்பட்டது.
image
இதற்கு இணையான ஆண்டு 1665 ஆகும். திருமலைநாயக்கருக்குப் பின் மதுரையை ஆட்சிசெய்த சொக்கநாத நாயக்கர் மற்றும் சொக்கநாத நாயக்கரின் தாயாருக்கு புண்ணியமாகவும் மற்றும் திருமலை நாயக்கர், முத்துவீரப்ப நாயக்கருக்கு புண்ணியமாகவும் மதுரை அவுசேகபண்டாரத்தின் பாரிசமாக அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.
image
சொரிக்கான்பட்டி என்ற ஊரின் பெயர் கல்வெட்டில் சொறிகாமன்பட்டி என்றே உள்ளது. மக்களின் பேச்சு வழக்கில் சொறிகாமன் பட்டி என்ற பெயர் மருவி இன்று சொரிக்கான்பட்டி என்று பேச்சு வழக்கில் உள்ளது. மேலும் இவ்வூரின் எல்லையாக இவ்வூரை சுற்றியுள்ள கருமாத்தூர், கரடிகல்லு, பொன்னமங்கலம், கிண்ணிமங்கலம் என நான்கு ஊர்களின் பெயர்கள் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும் இங்கு இருந்த அறக்கட்டளைக்கு சில வரி விலக்கும் அளிக்கப்பட்டிருந்தது.
image
இந்த தன்மத்துக்கு யாரேனும் கேடு விளைவித்தால் அவர்கள் கங்கை கரையில் காராம்பசுவையும், தங்கள் தாயாரை கொன்ற பாவத்தில் போவார் என்று கூறப்பட்டுள்ளது. அறக்கட்டளையை நன்கு பாதுகாத்து நமக்கு பின்னல் வரும் சந்ததிகளும் காக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறான சொற்கள் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.