நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து, வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் “முகமது நபி உயிருடன் இருந்திருந்தால் வன்முறைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்திருப்பார்” என்று கடுமையாக சாடியுள்ளார்.
முகமது நபியைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை கைது செய்யக் கோரி இஸ்லாமிய சமூகத்தினர் கடந்த இரு தினங்களாக நாடு தழுவிய போராட்டங்களை நடத்தினர். டெல்லி ஜமா மஸ்ஜித், ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித், லூதியானாவின் ஜமா மஸ்ஜித், கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ், பிரயாக்ராஜின் அடல் பகுதியில் நூபுர் ஷர்மாவை கைது செய்யக்கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஜார்கண்டின் ராஞ்சியில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில் இரண்டு பேர் இறந்தனர். மேற்கு வங்கத்தின் ஹவுராவில் நிகழ்ந்த வன்முறையில் பலர் காயமடைந்தனர். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு அட்டாலா பகுதியில் நடந்த மோதலின் போது கற்கள் வீசப்பட்டன.
வங்க தேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் நுபுர் ஷர்மாவை கைது செய்யக் கோரி பொதுச் சொத்துக்களை அப்பட்டமாக சேதப்படுத்தி வரும் போராட்டக்காரர்களை கடுமையாக சாடியுள்ளார். “விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை, மனிதர் இல்லை, துறவி இல்லை, மெசியா இல்லை, தீர்க்கதரிசி இல்லை, கடவுள் இல்லை. உலகத்தை சிறந்த இடமாக மாற்ற விமர்சன ஆய்வு அவசியம். முகமது தீர்க்கதரிசி இன்று உயிருடன் இருந்திருந்தால் கூட, உலகெங்கிலும் உள்ள வெறியர்களின் பைத்தியக்காரத்தனத்தைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்திருப்பார்.” என்று கூறியுள்ளார் தஸ்லிமா நஸ்ரின்.
Even if prophet Muhammad was alive today, he would have been shocked to see the madness of the Muslim fanatics around the world.
— taslima nasreen (@taslimanasreen) June 10, 2022
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM