சென்னை: அதிமுகவின் பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் பிறப்பித்தது இடைக்கால உத்தரவுதான், பிரதான வழக்கு நிலுவையில் உள்ளது. விதிகளை மீறி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என ஓ.பி.எஸ். மனுவில் தெரிவித்தார்.
