18 ஆண்டுகளுக்கு பிறகு டாடா குழுமம் முதல் முறையாக ஐபிஓ வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2004ஆம் ஆண்டு டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் ஐபிஓ வெளியிட்டது. அதன்பிறகு தற்போது டாடா மோட்டார்ஸ் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஓ வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாடா குழுமத்தின் இந்த பங்கினை வாங்கி போடுங்க.. 3 மாதத்தில் நல்ல லாபம் கிடைக்கும்?
டாடா குழுமம் ஐபிஓ வெளியிடுவதற்காக வங்கியாளர்களை நியமித்துள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

டாடா ஐபிஓ
டாடா மோட்டார்ஸ் அதன் துணை நிறுவனங்களில் ஒன்றான டாடா டெக்னாலஜிஸ் இந்த நிதியாண்டில் ஐபிஓ பட்டியலிட திட்டமிட்டுள்ளது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் ஐபிஓ சந்தையில் எந்த டாடா குழும நிறுவனத்திற்கும் ஐபிஓ பட்டியலிடவில்லை. இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்ற டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரனின் பதவிக் காலத்தின் கீழ் வெளியிட இருக்கும் முதல் ஐபிஓ இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா டெக்னாலஜிஸ்
டாடா டெக்னாலஜிஸ் எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் தேவை அதிகரித்துள்ளதாலும், விண்வெளித் துறையில் மீண்டும் எழுச்சி பெற்றதாலும் ஐபிஓ வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கூடுதல் முதலீடு
2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, டாடா டெக்னாலஜிஸில் 74 சதவீத பங்குகளை டாடா மோட்டார்ஸ் கொண்டுள்ளது. டாடா டெக் நான்கு முக்கிய பிரிவுகளில் கவனம் செலுத்துகிறது. அவை வாகனம், விண்வெளி, தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் தொழில்துறை. இந்த நான்கு பிரிவுகளிலும் கூடுதல் முதலீடு செய்வதற்கு ஐபிஓவில் திரட்டப்படும் பணம் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

சேவைகள்
டாடா டெக்னாலஜிஸ் உலகெங்கிலும் 9,300 நபர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. இந்நிறுவனம் 18 உலகளாவிய விநியோக மையங்கள் மற்றும் நான்கு வணிகப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பொறியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சேவைகள், டிஜிட்டல் நிறுவன தீர்வுகள், கல்விச் சலுகைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட மறுவிற்பனை ஆகிய சேவைகளை செய்து வருகிறது.

பங்குகள்
2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, டாடா மோட்டார்ஸ் டாடா டெக்னாலஜிஸில் 72.48% பங்குகளை வைத்திருக்கும் அதே வேளையில், ஆல்பா டிசி ஹோல்டிங்ஸ் மற்றும் டாடா கேபிடல் க்ரோத் ஃபண்ட் ஆகியவை முறையே 8.96% மற்றும் 4.48% பங்குகளை வைத்துள்ளன.

மின்சார வாகனங்கள்
மேலும் மென்பொருள், வன்பொருள் மற்றும் சேவைகள் துறையில் 2,300க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்களை டாடா குழுமம் வைத்துள்ளதால், அடுத்த தலைமுறைகளுக்கான மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.

வணிகத்தை விரிவுபடுத்த திட்டம்
பிசினஸ் ஸ்டாண்டர்ட் அறிக்கையின்படி, நடப்பு 2022-23 நிதியாண்டில் டாடா டெக்னாலஜிஸ் தனது பங்குகளை பட்டியலிடவும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை புதிய வாடிக்கையாளர்களுக்கு வணிகத்தை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

டாடா ஸ்கை
மேலும் மற்றொரு டாடா குழும நிறுவனமான டாடா ஸ்கை, டிஸ்னி உள்ளிட்ட முதலீட்டாளர்களுக்கு ஐபிஓவைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tata Technologies IPO Soon, First Tata Group Company To Launch IPO In 18 years
Tata Technologies IPO Soon, First Tata Group Company To Launch IPO In 18 years | 18 ஆண்டுகளுக்கு பின் ஐபிஓ.. டாடா குழுமம் எடுத்த முடிவு!.