Tamil news today live : இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் ?

பெட்ரோல்- டீசல் விலை

பெட்ரோல் – டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் லிட்டர் ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பாவானி சாகர் அணை நீர்மட்டம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.  பவானிசாகர் அணை நீர்மட்டம் – 96.70 அடி, நீர் இருப்பு – 26.2 டிஎம்சி, நீர்வரத்து – 10,277 கன அடி, நீர் வெளியேற்றம் – 905 கன அடி ஆக உள்ளது.

நீட் தேர்வு

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது.  தமிழகத்தில் 18 நகரங்களில் நடைபெறும் தேர்வை 1 ½   லட்சம் பேர் எழுத உள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
09:48 (IST) 17 Jul 2022
தொழில்நுட்ப கோளாறால் விமானம் தரையிறக்கம்

ஷார்ஜாவிலிருந்து ஹைதராபாத் புறப்பட்ட இன்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் தரையிறங்கியது.

09:45 (IST) 17 Jul 2022
இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் ?

கொரோனா சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

09:44 (IST) 17 Jul 2022
இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

பரபரப்பான சூழலில், இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், அடையாறு நட்சத்திர விடுதியில் கூட்டம் நடைபெற உள்ளது.

08:49 (IST) 17 Jul 2022
ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் – 5வது நாளாக போராட்டம்

ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் – போராட்டம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம். 5 வது நாளாக சடலத்தை வாங்க பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டம்.

08:35 (IST) 17 Jul 2022
இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

அண்ணா அறிவாலயத்தில் குடியரசு தலைவர் தேர்தல் குறித்து ஆலோசிக்க இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா காரணமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை . திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.