பெங்களூரு, : சுதந்திர தின வைர விழாவையொட்டி, ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 17 வரை, ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்றும்படி, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இது குறித்து, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியதாவது:தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும்.
ஆகஸ்ட் 11 முதல் 17 வரை, ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்.மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட, அனைத்து அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனைகள், வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், பஸ் நிலையம், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் முன்பாக, தேசிய கொடி ஏற்ற வேண்டும்.
இது பற்றி பேனர், துண்டு பிரசுரம் வழியாக, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மத்திய அரசின், இணையதளம், amritmahotsav.nic.inல், தேசிய கொடி தொடர்பாக, பேனர், போஸ்டர் மாதிரிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுபோன்று பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement