இந்தியாவின் பணக்கார பெண்மணி.. 2 ஆண்டுகளில் $12 பில்லியன் சொத்து அதிகரிப்பு.. யார் இவர்?

நாட்டின் மிகப்பெரிய பணக்கார பெண்மனிகளில் ஒருவரான சாவித்ரி ஜிண்டால், இவரின் சொத்து மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அவரின் சொத்து மதிப்பு 12 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

இது 2020ல் 4.8 பில்லியன் டாலராக இருந்த இவரின் சொத்து மதிப்பு நடப்பு ஆண்டில் 17.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

பெங்களூரில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஓலா.. எதற்காக தெரியுமா?

சொத்து மதிப்பு சரிவு?

சொத்து மதிப்பு சரிவு?

இது கடந்த 2019 மற்றும் 2020ல் இவரின் சொத்து மதிப்பு 50% குறைந்துள்ளது. இது கடந்த 2018ல் 8.8 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த 2019ல் 5.9 பில்லியன் டாலராகவும், 2020ல் 4.8 பில்லியன் டாலராகவும் சரிவினைக் கண்டது.

மீண்டும் டாப் 10 என்ட்ரி

மீண்டும் டாப் 10 என்ட்ரி

2021ல் சிறந்த 10 பெண்கள் கிளப்பில் இணைந்த சாவித்ரி ஜிண்டால், 2021ல் 18 பில்லியன் டாலரினையும் எட்டியுள்ளார்.

போர்ப்ஸ் இந்தியா அறிக்கையின் படி, சில ஆண்டுகளாகவே பெண் பணக்காரர்கள் பட்டியலில், சாவித்ரி ஜிண்டாலுக்கு பிறகு கிரம் மஜூம் தார் மற்றும் கிருஷ்ணா மஜூம் தார் ஆகியோரும் ஆகியோரும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மனைவி டூ தொழிலதிபர் எப்படி?
 

மனைவி டூ தொழிலதிபர் எப்படி?

2005ல் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தபோது, 55 வயதான ஓம் பிரகாஷ் ஜிண்டால் இறந்த பிறகு, அவரின் மனைவி சாவித்ரி ஜிண்டால் தொழிலை வழி நடத்த தொடங்கினார். அதன் பிறகு அரசியலிலும் களமிறங்கினார். பெரும்பாலனவர்களும் தங்களவு ஓய்வுகாலத்தினை அமைதியாக கழிக்க வேண்டும் என்றும் நினைக்கும் காலத்தில் கோடீஸ்வரராக தொழிலை வழி நடத்தி கொண்டிருக்கிறார்.

வெற்றி மந்திரம்

வெற்றி மந்திரம்

பலரும் எங்கு சுவர்களை மட்டுமே பார்த்தார்களோ, அங்கு கதவினை கண்ட சாவித்ரி, தனது கணவரின் வெற்றி மந்திரத்தின் மூலம் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகின்றார். தொழிலதிபராக மட்டும் அல்லாது, சாமானியர்களுக்கும் உதவும் பெண்ணாகவும் உள்ளார்.

1950ல் பிறந்த சாவித்ரி, அசாமின் டின்சிகியா நகரில பிறந்து வளர்ந்தவர்.

'சர்வதேச பட்டியல்

‘சர்வதேச பட்டியல்

இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் மட்டும் அல்ல, சர்வதேச அளவில் 126 பணக்கார பெண்மனியாகவும் உள்ளார். இது கடந்த 2020ல் 349 இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India’s richest woman Savitri Jindal’s net worth increased by $12 in 2 years

India’s richest woman Savitri Jindal’s net worth increased by $12 in 2 years/இந்தியாவின் பணக்கார பெண்மணி.. 2 ஆண்டுகளில் $12 பில்லியன் சொத்து அதிகரிப்பு.. யார் இவர்?

Story first published: Monday, July 18, 2022, 20:50 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.