அயர்லாந்தில் வாடகைக்கு எடுத்துச் சென்ற காரில் குமட்டும் வாசனையை அடுத்து, பரிசோதனையில் ஈடுபட்ட பெண்ணிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
அந்த காரின் பின் பகுதியில் ஆணின் சடலம் ஒன்றை அவர் கண்டுள்ளார். இதற்கு முன்னர் குறித்தை காரை வாடகைக்கு எடுத்துச் சென்ற நபராக இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
திங்களன்று அயர்லாந்தின் முல்லினாவத் பகுதியில் குறித்த ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் புகாரளித்த 20 வயது கடந்த பெண்ணிற்கு அது ஒரு மறக்க முடியாத நிகழ்வாக மாறிப்போனது என கூறப்படுகிறது.
இறந்த நபருக்கு 40 வயது என்றும், வாட்டர்ஃபோர்டில் இருந்து வந்தவர் என்றும், அந்த பெண் குமட்டிய வாசனையை அடுத்து காரை நிறுத்திவிட்டு சோதனையிட்ட பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, அந்த நபர் மாயமானதாக கூறி முன்னர் பொலிசார் பொதுமக்களின் உதவியையும் நாடியிருந்தனர்.
அவரது சடலம் குறித்த காரில் இருந்து மீட்கப்படுவதற்கு முன்னர் 2 வாரக்காலமாக தேடப்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.