“கருணாநிதி பேனா நினைவுச் சின்னத்தை எதிர்க்கவில்லை. ஆனால்…” – பூவுலகின் நண்பர்கள் விளக்கம்

சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பணியை போற்றும் பேனா நினைவுச் சின்னத்தை எதிர்க்கவில்லை. இருந்தாலும் அதனை இப்படி செய்யலாம் என தங்களது தரப்பில் விளக்கம் கொடுத்துள்ளது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் கடலில் 134 அடி உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல். அதற்கு தமிழ்நாட்டு மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்ததாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு முன்னதாக தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அதே அறிக்கையில் கடலுக்குள் நினைவு சின்னம் அமைப்பதால் ஏற்படும் விளைவுகள், மெரினாவின் மாற்றம், மீனவர்களுக்கான பாதிப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டப்பட்டு இருந்தது.

அதோடு தமிழ்நாடு அரசு இந்த பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் எனவும் சொல்லப்பட்டது. வாசிக்க>> கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவைக் கைவிடுக: பூவுலகின் நண்பர்கள் அடுக்கும் காரணங்கள்

தொடர்ந்து பேனா நினைவு சின்னத்தை அமைக்க பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எதிர்கிறதா என்ற பேச்சு எழுந்தது. இந்நிலையில், தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ளது அந்த அமைப்பு.

“கலைஞருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்க்கிறீர்களா என்று சிலர் கேட்கிறார்கள்.

நிச்சயமாக கலைஞருக்கான நினைவுச் சின்னம் வேண்டும் என்கிறோம். ஆனால், கடலில் வேண்டாம் என்கிறோம். படத்தில் உள்ளது போல், பேனாவை அவருடைய நினைவிடத்திலோ அல்லது அவர் உருவாக்கிய தலைமை செயலகத்திலோ” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.