குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கியில் கடன் பெறுவதற்கான தடைகள் நீக்கப்படுமா?… ஒன்றிய அரசுக்கு திமுக எம்பி. தயாநிதி மாறன் கேள்வி

புதுடெல்லி: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கி கடன் பெறுவதில் உள்ள தடைகளை நீக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று ஒன்றிய அரசுக்கு திமுக எம்பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். அதன் விவரம் பின்வருமாறு:*  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிதி ஆதாரம் மற்றும் அவற்றின் மீட்பு குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வு அல்லது பகுப்பாய்வு மேற்கொண்டுள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.* கொரோ னா பெருந்தொற்று கால த்தில், ஊக்க தொகு ப்பு பெற்ற பயனாளிகளின் விவரங்கள் மற்றும் இத்திட்டத்தின் தாக்கம் குறி த்து ஒன்றிய அரசு ஏதேனும் தடயவியல் ஆய்வு மேற்கொண்டுள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல் தளங்களில் இயங்க வழி செய்யும் வகையில் ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சர்வதேச சந்தையை அணுகுவதற்கு ஒன்றிய அரசு எந்த வகையில் உதவுகிறது?* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதில் உள்ள தடைகளை களைய ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.இதற்கு, ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் அளித்த பதில்கள் பின்வருமாறு: * 65% சிறு, குறு நிறுவனங்கள் அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் அரசின் சலுகைகளை பெற்றுள்ளனர். மேலும், 36% பயனாளிகள் கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை மூலம் கடன் பெற்றுள்ளனர்.* அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தில் கடன் பெறுவது மிகவும் எளிதானதாகவும், குறுகிய கால கடனுக்கு ஏதுவாகவும், குறைந்த செலவு, தடையற்ற பணப்புழக்கமாவும் உள்ளது. * குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களை பதிவு செய்து கொள்ள உத்யம் இணையதள சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயனாளிகள் பதிவு செய்து கொள்ளலாம்.* கொள்முதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆதரவு திட்டத்தின் கீழ் வர்த்தக கண்காட்சி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வதன் மூலம் புதிய சந்தையை அணுகுவதற்கு, மேம்படுத்துவதற்குமான முயற்சிகள் நடைமுறைக்கு வர உள்ளது.* ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் மூலம் மன அழுத்தத்தில் உள்ள பயனாளிகளுக்கு உடனடி கடன், அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூபாய் 3 லட்சம் கோடி கடன், சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ் ரூபாய் 50,000 கோடி சமபங்கு கடன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பதிவை எளிதாக்க உத்யம் இணையதளத்தின் மூலம் உடனடி புதிய பதிவு, ரூ.200 கோடி வரை கொள்முதல் செய்ய சர்வதேச அளவிலான டெண்டர்கள் இல்லை போன்ற திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.