ஐரோப்பிய நாடுகளை ஒவ்வொன்றாக வேட்டையாடும் ரஷ்யா… இந்த முறை சிக்கிய குட்டி நாடு


போலந்து, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கான எரிவாயு வழங்கலை தடை செய்துள்ளதையடுத்து, லாத்வியாவுக்கான எரிவாயுவை ரஷ்ய அரசு துண்டித்துள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் தன்னை எதிர்த்த தலைவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், எரிசக்தி விநியோகங்களை ஆயுதமாக்குவதால் ஐரோப்பிய நாடுகள் கடுமையான எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்கிறது.

ஐரோப்பிய நாடுகளை ஒவ்வொன்றாக வேட்டையாடும் ரஷ்யா... இந்த முறை சிக்கிய குட்டி நாடு | Russia Cuts Gas Latvia Growing Energy Panic

இந்த நிலையில், தற்போது ரஷ்யாவின் Gazprom நிறுவனம் லாத்வியாவுக்கான எரிவாயு வழங்கலை துண்டித்துள்ளதுடன், ரஷ்யாவுக்கான உள்ளூர் பணத்தில் வர்த்தகம் செய்ய மறுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த வாரம் ஜேர்மனிக்கான எரிவாயு வழங்கலில் சுமார் 20% வரையில் குறைத்துள்ள ரஷ்யா, தலைநகர் உட்பட முக்கிய நகரங்களை இருளில் தள்ள காரணமானது.
உக்ரைன் தொடர்பில் தமது முடிவை ஏற்றுக்கொள்ளாத ஐரோப்பிய நாடுகளை விளாடிமிர் புடின் திட்டமிட்டே வேட்டையாடுவதாக பெரும்பாலான தலைவர்கள் நம்புகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளை ஒவ்வொன்றாக வேட்டையாடும் ரஷ்யா... இந்த முறை சிக்கிய குட்டி நாடு | Russia Cuts Gas Latvia Growing Energy Panic

மேலும், உலக நாடுகளின் பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் ரஷ்யா, எரிவாயு மற்றும் எரிசக்தி வர்த்தகத்திற்கு ரூபிள் மதிப்பில் கட்டணம் செலுத்த கோரியது.
மட்டுமின்றி ரஷ்யா தனது பொருளாதாரத்தை தக்க வைக்க எரிசக்தியிலிருந்து பெறப்படும் வருவாயை நம்பியுள்ளது.

மேலும் அது இல்லாமல் கடுமையான பொருளாதார மந்தநிலையை நிச்சயமாக எதிர்கொள்ளும் என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளுக்கு அளிக்கப்படும் நெருக்கடியால் உக்ரைனுக்கு அவர்கள் அளிக்கும் ஆதரவு விலக்க வாய்ப்புள்ளதாகவும்,
இதனால் உக்ரைன் கண்டிப்பாக ரஷ்யாவிடம் சரணடையும் என விளாடிமிர் புடின் திட்டமிட்டு வருகிறார்.

ஐரோப்பிய நாடுகளை ஒவ்வொன்றாக வேட்டையாடும் ரஷ்யா... இந்த முறை சிக்கிய குட்டி நாடு | Russia Cuts Gas Latvia Growing Energy Panic

இதன் ஒருபகுதியாக ரூபிள் மதிப்பில் கட்டணம் செலுத்தாத டென்மார்க், பின்லாந்து, நெதர்லாந்து, போலந்து மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளின் எரிவாயு வழங்கலை ரஷ்யா துண்டித்தது. மட்டுமின்றி, ஜேர்மனியில் உள்ள ஷெல் நிறுவனத்திற்கும் எரிவாயு வழங்கலை ரஷ்யா நிறுத்தியுள்ளது.

இதனிடையே, தங்களுக்கு தேவையான எரிவாயுவை இன்னொரு நிறுவனத்திடம் இருந்து வாங்க முடிவு செய்துள்ளதாகவும், ஜனவரி 1, 2023 முதல் ரஷ்ய எரிவாயு இறக்குமதியை தடை செய்ய ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது எனவும் லாத்வியா பதிலடி கொடுத்துள்ளது.
ரஷ்யாவின் தற்போதைய முடிவால், லாத்வியா பெரிய தாக்கத்தை எதிர்கொள்ள போவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளை ஒவ்வொன்றாக வேட்டையாடும் ரஷ்யா... இந்த முறை சிக்கிய குட்டி நாடு | Russia Cuts Gas Latvia Growing Energy Panic



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.