
வெந்து தணிந்தது காடு : ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட சண்டை காட்சி
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படத்தில் ஒரே ஷாட்டில் சண்டை காட்சி ஒன்று இடம் பெற்று ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் அந்த சண்டை காட்சி போலவே தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்திலும் ஐந்து நிமிட நீளம் கொண்ட ஒரு சண்டை காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கி இருக்கிறார்கள். ஸ்டண்ட் மாஸ்டர் லீ விட்டேக்கர் என்பவர் இதை இயக்கி இருக்கிறார். மாநாடு படத்தின் சண்டைக் காட்சியை போலவே இந்த காட்சியும் சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.