சீனாவுக்கு ஆதரவாக போருக்கு தயார்: தைவான் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் ரஷ்யா


தைவான் விவகாரத்தில் சீனா போருக்கு செல்லும் என்றால், ரஷ்யாவின் ஆதரவு எப்போதும் உண்டு என முக்கிய அரசியல்வாதி ஒருவர் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எதிர்ப்பையும் மீறி தைவான் சென்று திரும்பியுள்ளார்.
தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தேவையின்றி தலையிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ள சீனா கடும் கண்டனம் தெரிவித்திருந்ததுடன், பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் மிரட்டியது.

இந்த நிலையில் ரஷ்ய செனட்டர் Vladimir Dzhabarov தெரிவிக்கையில், சீனாவுக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்குவதில் எந்த தவறும் இருப்பதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சீனாவுக்கு ஆதரவாக போருக்கு தயார்: தைவான் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் ரஷ்யா | Taiwan World War Russia Vows Fight For China

தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு உதவுவதால், ரஷ்யாவுக்கு ஆதாயம் தான் எனவும், சீனா இந்த விவகாரத்தில் கண்டிப்பாக சிறு உதவியை எதிர்பார்க்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யாவின் உதவி இல்லாமல் சீனாவால் அமெரிக்காவை எதிர்கொள்வது கடினம் எனவும் செனட்டர் Vladimir Dzhabarov தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு ஆதரவாக போருக்கு தயார்: தைவான் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் ரஷ்யா | Taiwan World War Russia Vows Fight For China

தைவான் தொடர்பான பதட்டங்கள் சமீபத்திய நாட்களில் அதிகரித்துள்ளன, மேலும் சர்ச்சைக்குரிய தீவில் இருந்து வெறும் 12 கடல் மைல் தொலைவில் சீன ராணுவத்தின் நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, தைவான் மீது சீனா தாக்குதலை முன்னெடுக்கும் என்றால், அமெரிக்கா களமிறங்கும் நோக்கில் ஜோ பைடன் நிர்வாகம் சமீபத்தில் சட்ட திருத்தம் ஒன்றையும் கொண்டுவந்துள்ளது.

சீனாவுக்கு ஆதரவாக போருக்கு தயார்: தைவான் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் ரஷ்யா | Taiwan World War Russia Vows Fight For China

தைவானை சீனாவுடன் இணைத்துக்கொள்வது என்பது சீனாவின் தேசிய அடையாளத்தின் முக்கிய பகுதி என்றே கூறுகின்றனர்.
மட்டுமின்றி அதன்பொருட்டு ராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கவும் சீனா தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.