2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டி:யுபுன் அபேகோனுக்கு வெண்கலப்பதக்கம்

இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுபுன் அபேகோன் வெண்கலப்பதக்கத்தை வெற்றிகொண்டார்.

இதன் மூலம் இம்முறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வரலாற்றில் சாதனை புரிந்துள்ளது.

பொது நலவாய விளையாட்டுப் போட்டியில் ,24 ஆண்டுகளில்  இலங்கை வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

இதன் மூலம் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றையும் யுபுன் அபேகோன் படைத்துள்ளார்.

அது மாத்திரமின்றி பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குகொண்டு பதக்கம் வென்ற முதலாவது ஆசிய வீரர் என்ற சாதனையை யுபுன் அபேகோன் பதிவு செய்துள்ளமை விசேட அம்சமாகும்.

அபேகோன் இதற்கு முன்னர் மூன்றாவது அரையிறுதி போட்டியில் 10.20 வினாடிகளில் ஓடிமுடித்து நான்காவது இடத்தைப் பிடித்த பின்னர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

கென்யாவின் ஃபெர்டினாண்ட் ஓமன்யாலா  Ferdinand Omanyala என்ற வீரர், 10.02 வினாடிகளில் ஓடிமுடித்து தங்கப் பதக்கத்தை வென்றார், தென்னாப்பிரிக்காவின் அகானி சிம்பைன் Akani Simbine  வீரர் ,10.13 வினாடிகளில் நிறைவு செய்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

அபேகோன் இறுதிப் போட்டியில் 10.14 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இதில் இலங்கை சார்பில் ஆறு வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.