மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பா.ஜ.க-வினர் ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்பையும், கொடியையும் பறித்தது போல…இந்த தேசத்தின் கொடியையும் மாற்றுவார்கள்.

ஜம்மு-காஷ்மீரின் கொடியையும், அரசியலமைப்பையும் திரும்பப் பெறுவோம் என்று என்னுடைய கட்சி சபதம் செய்திருக்கிறது. பா.ஜ.க இந்தியாவை மதவாத நாடாக மாற்றும், மூவர்ணக் கொடியை காவி கொடியாக மாற்றும். வருங்காலத்தில், இந்த நாடு நிலைத்து நிற்கும் அரசியல் சாசனத்தையும், மதச்சார்பின்மையின் அடித்தளத்தையும்கூட பா.ஜ.க அழித்துவிடும். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்த காஷ்மீர் பிரச்னையை தீர்க்க பா.ஜ.க-வுக்கு அழுத்தம் கொடுப்போம்” என்றார்.