உண்மையை உடைத்த ஸ்விக்கி டெலிவரி ஏஜென்ட்.. அட இது நல்லா இருக்கே..!

சமீபத்திய காலமாக ஸ்விக்கி, சேமேட்டோ ஊழியர்கள் பற்றிய பல செய்திகளை படித்து வருகின்றோம். சில இடங்களில் நல்ல விஷயங்களும் அரங்கேறியுள்ளன. சில இடங்களில் சில வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இது குறித்து டெல்லி பல்கலைக் கழகத்தில் சட்டம் படிக்கும் மாணவர் அனுராக் பார்கவா, தனது லிங்க்ட் பக்கத்தில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் கல்லூரியில் படித்து வரும் நிலையில், பகுதி நேரமாக ஸ்விக்கி டெலிவரி ஏஜெண்டாகவும் பணி புரிந்து வருகின்றார்.

பற்பல சர்ச்சைகள்

ஒரு பக்கம் 10 நிமிட டெலிவரி என்ற சர்ச்சை எழுந்த நிலையில், இதனால் டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்தது. இதனால் விபத்துக்கள் அதிகரிக்கலாம் என்றும், பல கேள்விகள் எழுந்தன. மேலும் சில இடங்களில் டெலிவரி பார்ட்னர்கள் தவறாக நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் தான் அனுராக்கின் பதிவானது கவனம் ஈர்த்துள்ளது.

கல்வி செலவுக்காக பகுதி நேர பணி

கல்வி செலவுக்காக பகுதி நேர பணி

அனுராக் தனது கல்வி செலவினங்களுக்காக பகுதி நேரமாக டெலிவரி பார்ட்னராகவும் வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த வேலைக்காக அவரை மக்கள் பரிதாப்பத்துடன் பார்ப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த டெலிவரி பார்ட்னர்கள் போர்வீரர்கள். நான் அவர்களை தலைவணங்குவேன் என்று அனுராக் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வேலையானது உங்களை ஒரு ஆளுமை உள்ள மனிதராக மாற்றும் என தெரிவித்துள்ளார்.

எளிதில் பணம் சம்பாதிக்க வழி
 

எளிதில் பணம் சம்பாதிக்க வழி

எளிதில் பணம் சம்பாதிக்கவும், நெகிழ்வாக பணியாகவும் உள்ளது. இதில் கெளரவமான வருமானம் கிடைக்கிறது என்று கூறும் அனுராக், இதன் மூலம் கல்வியிலும் கவனம் செலுத்த முடியும் என்கிறார். ஒரு ஆளுமை கிடைக்கும். பணம் கிடைக்கும். இதனை அனைத்தையும் ஒரே நேரத்தில் உங்கள் வசதிகேற்ப செய்யலாம்.

நல்ல வாழ்க்கை

நல்ல வாழ்க்கை

நான் என் அம்மவுடன் ஒரு கன்னியமான இடத்தில் வசித்து வருகின்றேன். நாங்கள் எங்களின் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்ந்து வருகின்றோம். இதுவரையில் வாடிக்கையாளார்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு தவறான நடத்தையும் நான் கண்டதில்லை. எதிர்கொண்டதும் இல்லை.

போதுமான ஊதியம்

போதுமான ஊதியம்

பணத்தை பற்றி பேசுகையில் அவர்கள் அடுத்த அம்பானிகளாகவோ அல்லது டாட்டாக்களாகவே நுழைய மாட்டார்கள். ஆனால் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த ஊதியம் போதுமானதாக உள்ளது. இந்த வேலையை செய்ய கடினமான மனம் வேண்டும். இந்த வேலைக்கு அபரிதமான ஒழுக்கம் மற்றும் கவனம் தேவை. நீங்கள் எடுத்து செல்லும் உணவை கவனமுடன் சரியான நேரத்தில் கொண்டு செல்ல வேண்டும். இது அலைந்து திரிபவர்களுக்கான வேலை அல்ல.

கற்றுக் கொண்ட விஷயங்கள்

கற்றுக் கொண்ட விஷயங்கள்

இந்த வேலைக்கு தனக்கு பொறுமை, ஒழுக்கம், பிறருக்கு மரியாதை., நிதி சிக்கனம், சாகசம், புத்தாலித்தனம் என பலவற்றை கற்றுக் கொடுத்ததாகவும் அனுராக் தெரிவித்துள்ளார். இன்று நான் என்னுள் ஒரு மனிதனை பார்க்கிறேன். பிறருக்கு என்னால் முடிந்த அளவுக்கு உதவ நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

எதற்காக இந்த பதிவு

எதற்காக இந்த பதிவு

உயர்தர மக்களுக்கு இந்த வேலையின் மதிப்பு தெரியும். ஆனால் பெரும்பாலான மக்கள் என்னை டெல்லியில் பரிதாப்பத்துடன் பார்க்கிறார்கள். இந்த வேலை என்னை ஆளுமை உள்ளனவாக மாற்றியுள்ளது என்று கூறியுள்ளார்.

அனுராக்கின் இந்த பதிவினை பல ஆயிரம் பேர் லைக் செய்துள்ள நிலையில், பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இது அனுராக்கின் பார்வையும், அந்த வேலையை எந்த கண்னோட்டத்தில் பார்த்தார் என்பதையும் அறிய முடிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: swiggy ஸ்விக்கி

English summary

A LinkedIn post by an employee working part-time as a Swiggy delivery agent while studying

A LinkedIn post by an employee working part-time as a Swiggy delivery agent while studying/உண்மையை உடைத்த ஸ்விக்கி டெலிவரி ஏஜென்ட்.. அட இது நல்லா இருக்கே..!

Story first published: Friday, August 5, 2022, 15:48 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.