ரெப்போ வட்டி உயர்வு: கல்லா கட்டிய வங்கி பங்குகள்

தொடர்ச்சியாக

தொடர்ச்சியாக உயர்ந்த பணவீக்கத்தைக் குறைத்து ரூபாயைப் பாதுகாக்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து, பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை மிதமான உயர்வுடன் முடிவடைந்தன.

மூலதனச் சந்தைகளில் தொடர்ந்து அந்நிய நிதி வரத்தும், கச்சா எண்ணெய் விலை குறைவதும் பங்குச் சந்தைகள் மீண்டும் வேகம் பெற உதவியது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் பட்டியலிடப்பட்ட 30-பங்குகளின் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 89.13 புள்ளிகள் அல்லது 0.15% உயர்ந்து 58,387.93 ஆக வர்த்தகம் ஆனது. எனினும், வர்த்தகத்தின் போது ஏற்ற இறக்கத்தை எதிர்கொண்டது. பகலில், இது 350.39 புள்ளிகள் அல்லது 0.60% உயர்ந்து 58,649.19 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 15.50 புள்ளிகள் அல்லது 0.09% உயர்ந்து 17,397.50 ஆக முடிந்தது. வெள்ளியன்று ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.40% ஆக உயர்த்தியது.

மே மாதத்திற்குப் பிறகு இது மூன்றாவது தொடர்ச்சியான அதிகரிப்பு. இது குறித்து ஆனந்த் ரதி ஷேர்ஸ் & ஸ்டாக் ப்ரோக்கர்ஸ் தலைமைப் பொருளாதார நிபுணர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுஜன் ஹஜ்ரா “இந்திய ரிசர்வ் வங்கியின் 50 பிபிஎஸ் விகித உயர்வு இன்று ஒருமித்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உள்ளது” என்று கூறினார்.

சென்செக்ஸ் பிரிவுகளில், அல்ட்ராடெக் சிமென்ட், ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், பவர் கிரிட், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின. மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை பின்தங்கிய நிலையில் இருந்தன.

ஓட்டுமொத்த ஆசிய கண்டத்தில் சியோல், ஷாங்காய், டோக்கியோ மற்றும் ஹாங்காங் சந்தைகள் லாபத்தில் முடிவடைந்தன. மத்திய அமர்வு ஒப்பந்தங்களின் போது ஐரோப்பிய பங்குகள் குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டன.

வியாழன் அன்று அமெரிக்க சந்தைகள் கலவையான குறிப்பில் முடிவடைந்தன. இதற்கிடையில், சர்வதேச எண்ணெய் பெஞ்ச்மார்க் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 0.18% அதிகரித்து 94.29 அமெரிக்க டாலராக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வியாழக்கிழமை ரூ.1,474.77 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியதால், மூலதனச் சந்தைகளில் நிகர வாங்குபவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.