புதுடெல்லி: நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 4 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அவர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் அவர் வலியுறுத்தியதாக திரிணமூல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறும்போது, ‘‘ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்கவே பிரதமர் மோடியை முதல்வர் மம்தா சந்தித்து பேசியுள்ளார்’’ என்று குற்றம் சாட்டியுள்ளனர்.