இந்தியாவில் இருக்கும் ஒரு சில பொதுத்துறை நிறுவனங்களைத் தவிரப் பெரும்பாலான நிறுவனங்கள் அதிகப்படியான நஷ்டத்தையும், தொடர் வர்த்தக இழப்பையும் எதிர்கொண்டு தான் வருகிறது.
இந்நிலையில் இந்தப் பட்டியலில் இந்தியாவின் அரசு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் சேர்ந்துள்ளது என்பது தான் முக்கியமான விஷயமாக உள்ளது.
குறிப்பாகக் கொரோனா தொற்றுக்கு பின்பு லைப் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தாண்டி பிற இன்சூரன்ஸ் சேவைகள் எந்த அளவிற்கு முக்கியம் என மக்கள் உணர்ந்திருக்கும் நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 நாள் உயர்வுக்கு முற்றுப்புள்ளி.. 52 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!

4 அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள்
இந்தியாவின் முன்னணி 4 அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் அதாவது ஆயுள் காப்பீட்டுப் பிரிவில் இல்லாமல் பிற பிரிவுகளில் இயங்கும் ஜென்ரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிதி நிலை குறித்து CAG அமைப்பு முக்கியமான ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.

26,364 கோடி ரூபாய் இழப்பு
சிஏஜி ஆய்வறிக்கையின் படி 2016-17 முதல் 2020-21 வரையிலான காலக்கட்டத்தில் 4 ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சுமார் 26,364 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளது எனச் சிஏஜி அமைப்பின் தணிக்கை அறிக்கை கூறுகிறது.

ஹெல்த் இன்சூரன்ஸ்
4 ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஹெல்த் இன்சூரன்ஸ் வர்த்தகம் வாயிலாக மொத்த லாபமும் குறைந்துள்ளது அல்லது பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த 4 நிறுவனங்கள் சுமார் 26,364 கோடி ரூபாய் அளவிலான இழப்பை எதிர்கொண்டு உள்ளது.

சிஏஜி தணிக்கை அறிக்கை
இந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் சேவை-க்கு வாங்கும் ப்ரீமியம் தொகையைக் காட்டிலும் கிளைம் செய்யப்படும் தொகை அதிகமாக இருந்த காரணத்தால் அதிகளவிலான இழப்பு ஏற்பட்டு உள்ளதாக சிஏஜி தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்நிறுவனங்களின் தணிக்கை அறிக்கையில் ரீடைல் பாலிசியைக் காட்டிலும் ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியம் குறைவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம்
சிஏஜி ஆய்வு செய்த 4 ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இதுதான் நியூ இந்தியா அசூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், ஓரியென்டல் இன்சூரன்ஸ், நேஷ்னல் இன்சூரன்ஸ். மேலும் சில முக்கியமான விதிகளையும் இந்த 4 ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீறியுள்ளதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
CAG report says 4 PSU general insurers facing 26,000 crore loss
CAG report says 4 PSU general insurers facing 26,000 crore loss ரூ.26000 கோடி இழப்பு.. மோசமான நிலையில் அரசு நிறுவனம்..!