பெட்ரோல் – டீசல் விலை
பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும். டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இடுக்கி அணை திறப்பு – எச்சரிக்கை
கேரளா தொடர் மழை காரணமாக இன்று இடுக்கி அணை திறப்பு. முல்லை பெரியாறு கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்.
கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 4வது டி20 போட்டியில் அபார வெற்றிபெற்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியது இந்தியா. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.
நிதி ஆயோக் கூட்டம்
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம். தேசிய கல்வி கொள்கை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது என்று தகவல்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவின் 75வது கிராண்ட் மாஸ்டரானார் தமிழகத்தை சேர்ந்த வீரர் பிரனவ் வெங்கடேஷ்.
மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 1.20 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
செங்கல்பட்டு: தேர்தல் முன் விரோதம் காரணமாக அச்சரப்பாக்கம் பேரூராட்சி 13ஆவது வார்டு கவுன்சிலர் சுரேஷை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த சுரேஷ்க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்துவது குறித்து மக்கள் [email protected] என்ற இணையதளம் மூலம் வரும் 12ம் தேதி வரை கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தேர் விபத்தில் காயமடைந்த ஒருவர் பலி புதுக்கோட்டை தேர் விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த ராஜகுமாரி(52) உயிரிழப்பு .
தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கிவைக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
தென்காசி, குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.
ஸ்ரீஹரிக்கோட்டவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட SSLV ராக்கெட்டின் சிக்னல் கிடைக்கவில்லை. EOS 2 மற்றும் ஆசாதி-சாட் செயற்கைக்கோள்களின் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் – கருணாநிதி உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மெரினா வந்தடைந்த அமைதிப் பேரணி. ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து புறப்பட்ட திமுகவின் அமைதிப் பேரணி மெரினா வந்தடைந்தது.