வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தின்போது முதன்முதலாக தேசிய கொடியேற்றிய அருணா ஆசப்அலி! காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி…

டெல்லி:  1942ம் ஆண்டு ஆகஸ்டு 9ந்தேதி அன்று நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தின்போது, சுதந்திர வேட்கையின் அடையாளமாக தேசிய கொடியேற்றி, நாட்டு மக்களிடையே பெரும்பேரை பெற்றவர் அருணா ஆசப் அலி. இதுகுறித்து சோனியா காந்தி செய்தி வெளியிட்டு உள்ளார்.

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயேரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தது. ஜகஹ்ர்லால் நேரு, மகாத்மா காந்தி, திலகர்,  கோகலே என பல முக்கிய தலைவர்கள், வெள்ளையனுக்கு எதிராக போராடி வந்தனர். இதன் ஒருபகுதியாக 1942ம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தின்போது  முதன்முதலாக அந்த மைதானத்தில் தேசிய கட்சியின் கொடியை ஏற்றியவர் அருணா ஆசப் அலி.

1942ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற வெளையனே வெளியேறு இயக்க போராட்டம், மும்பையில் கோவாலியா குள மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதன்முதலாக இந்திய தேசிய கொடியை ஏற்றியவர் ஆசிப் அலி. இதன் மூலம் அவர் நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டவர். இவர் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,

இந்த வரலாற்று நாளில் (ஆகஸ்டு 9), அருணா ஆசிப் அலி தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தார். இந்த போராட்டத்தின்போது, லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கப்பட்டனர் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய துணிச்சலுக்கு பலன் கிடைத்தது. அது நமது சுதந்திர வேட்கையின் அடையாளம்..

மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்த இந்தியாவை விட்டு ஆங்கிலேயேரை வெளியேற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நாம் நினைவுகூரும்போது, இந்தியர்களின் சுதந்திரத்திற்காக கோடிக்கணக்கான நம் நாட்டு மக்களும் பெண்களும் செலுத்திய விலையை மறந்துவிடக்கூடாது. அதை, நமது முழு பலத்துடன்  பாதுகாப்பதற்கும் நமது உறுதியை புதுப்பிப்போம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.