இன்று பிரபலங்களாகவும் தொழிலதிபர்களாகவும் இருப்பவர்கள் சிறு வயதிலும் அவர்களது வயதுக்கேற்ப சாதனை செய்திருப்பார்கள் என்பதை அவர்களது வாழ்க்கை வரலாறை படிக்கும் போது தெரிந்து கொண்டிருப்போம்
அந்த வகையில் இன்று இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா, 10ஆம் வகுப்பு படிக்கும்போதே கவிதை ஒன்றை எழுதியதாக தனது மலரும் நினைவுகளை பதிவு செய்துள்ளார்
15 வயதிலேயே அவர் மிகவும் ஆழமான கருத்துக்களை உடைய கவிதை எழுதி இருப்பதாக நெட்டிசன்கள் பலர் பாராட்டி வருகின்றனர்
பேடிஎம் நிறுவனர்
பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா, கடந்த 1991ம் ஆண்டு தான் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எழுதிய கவிதையை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

உங்கள் செயல்களில் நம்பிக்கை வையுங்கள்
‘உங்கள் செயல்களில் நம்பிக்கை வையுங்கள்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த கவிதைக்கு அப்போதே ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மலரும் நினைவு
தற்போது தற்செயலாக நான் 1991-ஆம் ஆண்டு எழுதிய கவிதை கிடைத்தது என்றும் அப்போது நான் 10ஆம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தேன் என்றும் அவர் தனது ட்விட்டரில் மலரும் நினைவுகளை பதிவு செய்துள்ளார். இந்த கவிதை வறுமையை ஒழிப்பதற்கும் அறிவை பெறுவதற்கும் கடின உழைப்பின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்

நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்
விஜய் சேகர் ஷர்மாவின் இந்த ட்விட்டிற்கு நெட்டிசன்கள் ஏராளமான பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக ட்விட்டர் பயனாளி அஜய் அகர்வால் என்பவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ’15 வயதில் ஒருவருக்கு இவ்வளவு ஆழமான மற்றும் வழிகாட்டக்கூடிய கவிதை எழுதுவது என்பது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்

ஆழமான கருத்துக்கள்
குழந்தை பருவம் என்பது பல நம்பிக்கைகளை கடந்து செல்லும் பருவம் என்றும் அந்த பருவத்தில் ஒருவர் இவ்வளவு ஆழமான கருத்துக்களை பதிவு செய்வது என்பது ஆச்சரியத்திற்குரியது என்றும் பியூஸ் திவான் என்பவர் கமெண்ட் பதிவு செய்துள்ளார்

சரிவு
பேடிஎம் நிறுவனம் ஐபிஓ வெளியிட்டதில் இருந்து மூன்றில் இரண்டு பங்கு மதிப்பை இழந்து, சரிவை சந்தித்து வருகிறது. ஆனால், கடந்த மாதம் ஒரு நேர்காணலில், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் $1 பில்லியன் வருடாந்திர வருவாயை எட்டும் இந்தியாவின் முதல் இணைய நிறுவனமாக பேடிஎம் உருவாகும் என்று விஜய் சேகர் ஷர்மா கூறினார். மேலும் நாங்கள் 1 பில்லியன் டாலர் இலக்கை வைத்து, அந்த இலக்கை அடைய முயற்சித்து வருகிறோம் என்றும் கூறினார்.
Paytm founder Vijay Shekhar Sharma shares poem he wrote for school magazine in 1991
Paytm founder Vijay Shekhar Sharma shares poem he wrote for school magazine in 1991 | 10ஆம் வகுப்பு படிக்கும்போதே கவிதை: பேடிஎம் நிறுவனரின் மலரும் நினைவுகள்!