வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மத்திய அரசின் கடன் சுமை மற்றும் வட்டி சுமை தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்பாக சிஏஜி எனப்படும் மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை கவலை தெரிவித்துள்ளது. பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அதன் அறிக்கையில், கடந்த 2015- 16 நிதியாண்டு முதல் 2019- 20 நிதியாண்டு வரையிலான கடன் / ஜிபிடி விகிதம், வட்டி கட்டுதல், வட்டி விகிதம் பரவல் ஆகியவை சாதகமற்றதாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2015 – 16ல் கடன் முதல் ஜிடிபி வரையிலான விகிதம் 52.30 சதவீதமாக உள்ளது. இதுவே, 2015 – 16 நிதியாண்டில் 50.5 சதவீதமாக இருந்தது. 2019 – 20 நிதியாண்டில், தனது வருமானத்தில் 34 சதவீதத்தை, தான் வாங்கிய கடனுக்காக வட்டியாக மத்திய அரசு செலுத்தியுள்ளது. ஆனால், 2015 – 16 நிதியாண்டில் இந்த விகிதம் 32 சதவீதமாக இருந்தது. 2016ம் நிதியாண்டில் சராசரியாக வட்டி கட்டியதற்கான செலவு 6.91 சதவீதத்தில் இருந்து 6.61 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், தொடர்ந்து கடன் வாங்கியதால் 2016ம் நிதியாண்டில் ரூ.4.57 லட்சம் கோடியில் இருந்து 2020ம் நிதியாண்டில் 6.55 லட்சம் கோடியாக அதிகரித்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட றிக்கையில், 2021ம் நிதியாண்டில் 6.80 லட்சம் கோடி வட்டியாக செலுத்தப்பட்டது. இது 2022ம் நிதியாண்டில் 6.80 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில், வருமானத்தில் 37 சதவீதம் வட்டி கட்டுவதற்காக செலவிடப்பட்டுள்ளது. 2022ல் ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் கடன் ரூ.128 லட்சம் கோடியாக உள்ளது. இது ஜிடிபியில் 54 சதவீதமாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement