கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 அணைகள் – ஆந்திர அரசின் முடிவால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி!

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணைகள் கட்ட ஆந்திர மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து உருவாகும் கொசஸ்தலை ஆறு, திருவள்ளூர் மாவட்டம் வழியாக பூண்டி ஏரியில் கலக்கிறது. இந்த ஆற்றிலிருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீரை சித்தூர் பகுதியில் அணை கட்டி ஆந்திர மாநில அரசு தடுத்து தேக்கியுள்ளது. இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் 2 இடங்களில் புதிய அணை கட்டுவதற்காக 177 கோடி ரூபாயை அம்மநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. வெள்ள அபாய எச்சரிக்கை.. | Flood warning  issued for Kosasthalaiyar River | Puthiyathalaimurai - Tamil News | Latest  Tamil News | Tamil News Online | Tamilnadu News
சித்தூர் மாவட்டத்திலும், நகரி அருகிலும் அணைகள் கட்ட அம்மாநில அரசு திட்டமிடப்பட்டுள்ளது. அணைகள் கட்டிய பிறகு அந்த பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் என ஆந்திர மாநில நீர்ப்பாசன துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அணைகள் கட்டும் பணிகளுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் டெண்டர்கள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொசஸ்தலை ஆற்றின் வெள்ளப்பெருக்கு : அ.தி.மு.க அரசின் அலட்சியத்தால் 30-க்கும்  மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு!
இந்த அணைகள் கட்டப்பட்டால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராத நிலை ஏற்படும் என அஞ்சப்படுகிறது. ஆந்திர மாநில அரசின் அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Work begins to strengthen breached bund of Kosasthalaiyar river - The HinduSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.