சென்னையில் 100% பேருந்துகள் இயக்க வேண்டும்! மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவு!

சென்னை: சென்னையில் 100% பேருந்துகள் இயக்கத்தை உறுதிப்படுத்த மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மாநகர பேருந்துகளில், குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படுவது இல்லை என்றும், ஒரே நேரத்தில் மொத்தமாக வருவதாகவும் புகார்கள் உள்ளன. அதுபோல இரவு நேரங்களில் 9 மணிக்கு மேல் முக்கிய இடங்களில் பேருந்து சேவைகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

சொகுசு பேருந்துகள் வெள்ளை வரிசை, நீலநிற வரிசை, மஞ்சள் வரிசை மற்றும் ஆரஞ்சு வரிசை என நான்கு வகைகள் உள்ளன. 2011 நவம்பர் மாதம் வரையிலான புள்ளிவிவரக்கணக்குகள் படி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் 3,637 பேருந்துகள் உள்ளன. குளுகுளு வசதியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வால்வோ பேருந்துகளும் உள்ளன. இந்த பேருந்துகள் முறையாக, குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுவது இல்லை என்ற புகார்களைத் தொடர்ந்து, மாநகர போக்குவரத்துக் கழகம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

இதையடுத்து சென்னையில் 100% பேருந்துகள் இயக்க வேண்டும் அனைத்து மாநகர பேருந்து பணிமனை நிர்வாகிகளக்க சென்னை  மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.