இந்தியா பக்கம் திரும்பும் தைவான்.. கடுப்பான சீனா..?!

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போன்று தைவான் குட்டி நாடாக இருந்தாலும் அதிகச் சக்தி வாய்ந்தாக உள்ளது, ஆயுத பலத்தில் இல்லை தொழில்நுட்ப பலத்தில்.

ஏன் சீனாவே பல நாட்களாகத் தைவான் நாட்டைக் கைப்பற்ற அந்நாட்டு எல்லையில் ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் எவ்விதமான தாக்குதல்களையும் இதுவரையில் நடத்தவில்லை. இதற்கு முக்கியக் காரணம் சீனாவின் ஒட்டுமொத்த உற்பத்தி துறையும் தைவான் நாட்டை நம்பிதான் உள்ளது.

அந்த அளவில் தொழில்நுட்பத்தில் குறிப்பாகச் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் முன்னோடியாக உள்ளது தைவான். சீனா-வை எதிர்த்து நிற்கும் தைவான் நாட்டின் கண் தற்போது இந்தியா மீது திரும்பியுள்ளது.

இந்த 3 பங்குகள் உங்களிடம் இருக்கா.. இல்லாட்டி வாங்கி வைங்க.. 15% லாபம் கொடுக்கலாம்!

தைவான்

தைவான்

தைவான் சர்வதேச அளவில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு, விநியோகத்தில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் வேளையில், தைவான் நாட்டின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை வைத்துள்ளது.

சீனா தைவான்

சீனா தைவான்

இந்தச் சூழ்நிலையில் சீனா தைவான் மீது மொத்தமாகப் பொருளாதாரத் தடை விதித்தோ அல்லது போர் தொடுத்தாலோ தைவான் நாட்டிற்கு மாற்று உற்பத்தி தளம் சீனாவுக்கு இணையாக வேறு எங்கும் இல்லை.

இந்தியா

இந்தியா

இந்த நிலையில் தைவான் நாட்டின் செமிகண்டக்டர் சிப் உற்பத்தி நிறுவனங்கள் மாற்று உற்பத்தி தளத்தைத் தேடும் பணியில் இறங்கியது மட்டும் அல்லாமல் இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையை அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

செமிகண்டக்டர் சிப்
 

செமிகண்டக்டர் சிப்

மத்திய அரசு செமிகண்டக்டர் சிப் தயாரிப்புக்காக PLI திட்டம் அறிவிக்கும் போதே தைவான் நாட்டின் முன்னணி செமிகண்டக்டர் சிப் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுப் பேச்சுவார்த்தை நடத்தரப்பட்டது. இந்நிலையில் சீன தாக்குதலை தொடர்ந்து பேச்சுவார்த்தை வேகப்படுத்தப்பட்டு உள்ளது தைவான். இது இந்தியாவுக்கு ஜாக்பாட் ஆகப் பார்க்கப்படுகிறது.

உற்பத்தி பொருட்கள்

உற்பத்தி பொருட்கள்

சீனா தாக்குதல் அச்சம் இருக்கும் வேளையில் தைவான் நாட்டின் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்து உற்பத்தி தளத்திலும் கூடுதலான உற்பத்தி பொருட்களை வாங்கி குவிக்கப்பட்டு உள்ளது என Macronix international நிறுவனத்தின் மூத்த தலைவர் Gabriel Chou தெரிவித்துள்ளார்.

தைவான் முக்கியம்

தைவான் முக்கியம்

செமிகண்டக்டர் சிப் தயாரிக்க உற்பத்தி பொருட்களுக்கு ஜப்பான்-ஐ தைவான் நம்பியிருந்தாலும், செமிகண்டக்டர் சிப்-க்காக உலகமே தைவான்-ஐ நம்பியிருக்கிறது. இதனால் உற்பத்தி மற்றும் விநியோகம் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதில் தைவான் செமிகண்டக்டர் சிப் நிறுவனங்கள் உள்ளது.

கடுப்பான சீனா

கடுப்பான சீனா

ஏற்கனவே சீனா- அமெரிக்கா பிரச்சனையால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு இந்தியா, வியட்நாம், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது சீன பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி-க்கு மிகவும் முக்கியமான செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் தைவான் நிறுவனங்கள் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்குச் செல்வது பெரும் பாதிப்பை சீனாவுக்கு ஏற்படுத்தும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Taiwan planning to leave china; seeks alternate sites for semiconductor manufacturing including India

Taiwan planning to leave china; seeks alternate sites for semiconductor manufacturing including India இந்தியா பக்கம் திரும்பும் தைவான்.. கடுப்பான சீனா..?!

Story first published: Monday, August 22, 2022, 22:10 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.