10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. இந்த இணையதக முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்..!

கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணை தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்நிலையில்,10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று (23.08.2022) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

தேர்வு முடிவுகளை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண் (Roll No) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்து கொள்ளலாம் எனவும் மறுகூட்டலுக்கு வரும் ஆக.,25, 26 ஆகிய தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

 தனித்தேர்வர்கள் வருகிற 23.08.2022 (செவ்வாய்க் கிழமை) பிற்பகல் 03.00 மணி தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேற்படி இணையதள முகவரிக்குள் Login செய்தவுடன், “NOTIFICATION

மறுகூட்டலுக்கு விண்ணபிக்க விரும்புவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு 25.08.2022 (வியாழக்கிழமை) மற்றும் 26.08.2022 ( வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பாடத்திற்கு 205 ரூபாய் செலுத்த வேண்டும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.