புதுடில்லி : பணப் பரிமாற்ற மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை, டில்லி திஹார் சிறையிலிருந்து மண்டோலி சிறைக்கு மாற்ற, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுடில்லியைச் சேர்ந்த தொழிலதிபர்களின் குடும்பத்தினரை ஏமாற்றி, 200 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பறித்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியபால் ஆகியோர், டில்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தம்பதி மீது மேலும் பல மோசடி வழக்குகளும் உள்ளன.
இந்நிலையில், திஹார் சிறையில் தனக்கும், தன் மனைவி உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால், வேறு சிறைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி, சுகேஷ் சந்திரசேகர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் எஸ்.ஆர்.பாட், சுதான்ஷு சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:தாக்கல் செய்த மனுக்கள் மற்றும் வாதங்கள் அடிப்படையில், மனுவை ஏற்பதற்கான முகாந்திரங்கள் உள்ளதாக அறிகிறோம். எனவே, மனுதாரரையும், அவரது மனைவியையும், திஹார் சிறையிலிருந்து, டில்லியில் உள்ள மண்டோலி சிறைக்கு மாற்ற உத்தரவிடுகிறோம். ஒரு வாரத்துக்குள் இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement