அரசியலில் தன் ஆரம்ப காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கவிதைகள் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் விரைவில் வெளியாக உள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போல் பிரதமர் பிரதமர் மோடியும் அவ்வப்போது கவிதைகள் எழுதுவார். தன்னை கவிஞர் என்று அழைக்க வேண்டாம். வார்த்தை ஆர்வலர் என்று அழைக்கும்படி மோடி குறிப்பிடுவார்.
தன் ஆரம்ப கால அரசியலின் போது அவர் குஜராத்தியில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு 2007-ல் வெளியானது. அதன் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல் விரைவில் வெளியாக உள்ளது.
மூத்த பத்திரிகையாளர் பாவனா சோமையா இந்த மொழிபெயர்ப்பை செய்துள்ளார்.
சுய கடிதம் என்ற பெயரிலான இந்த கவிதை தொகுப்பில் ”அப்பாவி” என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கவிதை அவருடைய குணாதிசயங்களை விளக்குவதாக உள்ளது.
” விதியைப் பற்றி என்ன கவலை
சவால்களை சந்திக்க பிறந்தவன்
நான் விளக்குகளை வாங்குவதில்லை
நானே ஒளிரும் தீப்பந்தம்
புற மினுமினுப்புகளை நம்புவதில்லை
உள் மன ஜொலிப்பில் நம்பிக்கை கொண்டவன்
இவ்வாறு அந்த கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.”
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement