பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரம் டெல்லி..!! 2-வது இடத்தில் மும்பை

புதுடெல்லி,

நாட்டின் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றது தலைநகரான டெல்லிதான் என்று தேசிய குற்ற ஆவண பிரிவு தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான 13 ஆயிரத்து 892 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 40 சதவீதத்துக்கும் கூடுதலான அதிகரிப்பு ஆகும்.

இந்தியாவின் அனைத்து 19 பெருநகரங்களிலும் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லியில் பங்கு மட்டும் 32.20 சதவீதம் ஆகும்.

கடந்த ஆண்டில் டெல்லியில் தினசரி 2 சிறுமிகள் வீதம் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடத்தல், கணவரின் கொடுமை, சிறுமி கற்பழிப்பு ஆகியவை அதிக இடம்பிடித்திருக்கின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லிக்கு அடுத்து 2-வது இடத்தில் வர்த்தக தலைநகரான மும்பை உள்ளது. 3-வது இடத்தில் பெங்களூரு இருக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.