உலகை ஆளும் இந்தியா வம்சாவளியை சேர்ந்த CEOக்கள்.. எந்தெந்த நிறுவனங்களில்?

இந்தியர்களின் திறமையை இந்த உலகமே போற்றுகிறது என்றால் அது மிகையாது. ஏனெனில் இன்று உலகின் பல முன்னனி கார்ப்பரேட் நிறுவங்களின் தலைமை பொறுப்புகளில் இந்தியர்கள், இந்தியா வம்சா வளியினை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

அப்படி உலகம் முழுவதும் பேர்போன 10 சி ஈ ஓ-க்கள் யார்? அவர்கள் எங்கு பணிபுரிகின்றனர். வாருங்கள் பார்க்கலாம்.

ஆன்லைன் பேக்கரியில் ரூ.75 கோடி வணிகம்.. மாஸ் காட்டும் 3 நண்பர்கள்.. !

லக்ஷ்மன் நரசிம்மன்

லக்ஷ்மன் நரசிம்மன்

லக்ஷ்மன் நரசிம்மன், ஸ்டார்பக்ஷின் தலைமை செயல் அதிகாரி. இன்று உலகம் முழுக்க பல ஆயிரம் கிளைகளை தொடங்கி வரும் இந்த நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாவார். இவர் ஒரு இந்திய வம்சாவளியினை சேர்ந்தவராவர். இந்த ஆண்டு அக்டோபரில் இணையும் லஷ்மன், ஏப்ரல் மாதத்தில் புதிய தலைமை செயலராக பொறுப்பேற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுகள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பினை சாவித்ரிபாய் ஃபுலே பல்கைகலகத்தில் படித்தவர். அதன் பிறகு ஜெர்மன், பென்சில்வேனியார்விலும் முதுகலைப்படிப்பினை படித்துள்ளார்.

ஷாந்தணு நாரயண்

ஷாந்தணு நாரயண்

அடோப் நிறுவனத்தின் தலைவரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான ஷாந்தணு நாரயண், ஹைத்ராபாத்தில் பிறந்தவர். உஸ்மானியா பல்கலைகழகத்தில் பயின்றவர். அதன் பிறகு பவுலிங் கிரீன் ஸ்டேட் யுனிவர்சிட்டி மற்றும் கலிப்போர்னியா பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் கடந்த டிசம்பர் 2007ல் அடோப் நிறுவத்தின் சி ஈ ஓவாக நியமிக்கப்பட்டார்.

நிகேஷ் அரோரா
 

நிகேஷ் அரோரா

இந்திய தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான நிகேஷ் அரோரா, பாஸ்டன் கல்லூரி மற்றும் நார்த்தென் ஸ்டெர்ன் யுனிவர்சிட்டியிலும் பயின்றவர். இவர் கடந்த ஜூன் 2018ல் பாலோ ஆல்டோ நெட்வொர்க்கின் தலைமை செயல் அதிகாரியாகவும், தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

அரவிந்த் கிருஷ்ணா

அரவிந்த் கிருஷ்ணா

ஐஐடி கான்பூரின் முன்னாள் மாணவரான அரவிந்த் கிருஷ்ணா, ஐபிஎம்மின் தலைமை செயல் அதிகாரியாவர். இவர் ஆந்திராவை சேர்ந்தவராவர். 2021ல் ஐபிஎம்மின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளர். தனது இளங்களை படிப்பினை இந்தியாவில் படித்தவர், உயர்கல்விக்காக அர்பானா சாம்பெய்ன் பல்கலைம்க் கழகத்தில் பயின்றுள்ளார்.

லீனா நாயர்

லீனா நாயர்

லீனா நாயர் இந்திய வம்சாவளியை சேர்ந்தராவர். இவர் இந்தாண்டு இறுதியில் சேனல் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் சிஈஓ இவர் ஆகும். இவர் முன்னதாக யூனிலீவரின் தலைமை மனிதவள அதிகாரியாக இருந்தவராவர்.

பராக் அகர்வால்

பராக் அகர்வால்

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் சிஈஓ பராக் அகர்வால் ஆகும். இவர் இந்தியாவினை சேர்ந்தவர். மும்பை ஐஐடியில் பிடெக் படித்த அகர்வால், பின்னர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். யாஹூ, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பணியாற்றிய அகர்வால் தற்போது ட்விட்டரில் பணியாற்றி வருகின்றார்.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

இந்திய வம்சாவளியினை சேர்ந்த சுந்தர் பிச்சை, ஐஐடி காரக்பூரில் படித்தவர். இன்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாவார். கூகுளின் வளர்ச்சிக்கு சுந்தரின் பங்கு மிக முக்கியமானதாகும். கூகுளின் இன்று பிரபலமாக இருக்கும் பல டூல்களில் சுந்தர் பிச்சையின் பங்கு மிக முக்கியமானது எனலாம்.

சத்ய நாதெள்ளா

சத்ய நாதெள்ளா

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெள்ளா, மணிபால் யுனிவர்சிட்டியில் இளங்கலை படிப்பை படித்தவர். அதன் பிறகு Wisconsin-Milwaukee மற்றும் சிகாகோ யுனிவர்சிட்டியில் தனது உயர்கல்வியை முடித்தவர், 2014ம் ஆண்டு தலைமை செயல் தலைவர், தலைமை செயல் அதிகாரியாகவும் பதவியேற்றார்.

 அம்ரபாலி கான்

அம்ரபாலி கான்

மும்பையில் பிறந்த அம்ரபாலி கான், கலிப்போர்னியா பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவர். கடந்த டிசம்பர் 2021ல் ஒன்லி பேன்ஸின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் அதன் நிறுவனர் டிம் ஸ்டோலிக்குப் பிறகு இந்த பதவிக்கு வந்தார்.

ஜெய ஸ்ரீ உல்லால்

ஜெய ஸ்ரீ உல்லால்

லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்த ஜெய ஸ்ரீ உல்லால், சாண்டா கிளாரா யுனிவர்சிட்டி மற்றும் சான் பிரான்சிஸ்கோ யுனிவர்சிட்டயில் படித்தவர். இவர் அரிஸ்டா நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவராவர். அக்டோபர் 2008 முதல் பதிவியில் பணியாற்றி வருகின்றார்.

18 மாடி, 16 மருத்துவமனை, பிரம்மாண்ட சமையலறை.. ஐஎன்எஸ் விக்ராந்த் என்ன விலை தெரியுமா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: top 10 ceo டாப் 10

English summary

10 indian origin CEOs in top leading world companies

10 indian origin CEOs in top leading world companies/உலகை ஆளும் இந்தியா வம்சாவளியை சேர்ந்த CEOக்கள்.. எந்தெந்த நிறுவனங்களில்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.