கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு வொர்க் ஃபர்ம் ஹோம் (WFH) கீழ் வீட்டிலிருந்து வேலை செய்வது அதிகரித்து வருகிறது.
மறுபக்கம் ஒரு முழுநேர வேலையுடன் ஃப்ரீலான்ஸிங் செய்வதற்கான ஆடம்பரமான வார்த்தையாகவும் உருவாகியுள்ளது. இது ஐடி துறையின் உயர்மட்ட முதலாளிகள், ஊழியர்கள், மனிதவள நிர்வாகிகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு பெரும் பிரச்சனையாகவும் அமைந்துள்ளது.
இவை ஒருபுறம் இருந்தாலும், நீங்கள் ஒரு மாற்று வருவாயைத் தொடங்க விரும்பினால், உங்களுக்கு ஃப்ரீலான்சிங் மிகப் பெரிய வாய்ப்பை வழங்குகிறது.
எனவே ஃப்ரீலான்சின் வேலை வழங்கும் 5 பிரபல இணையதளங்கள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
அப் வொர்க் (Upwork)
அப்வொர்க் என்பது கிளவுட் அடிப்படையிலான தளமாகும், இது ஃப்ரீலான்ஸ் சேவை வழங்குநர்களை வாடிக்கையாளர்களுடன் இணைக்கிறது. பயனர்கள் தளத்தில் இலவசமாகப் பதிவு செய்யலாம்.
ஃப்ரீலான்சின் பணி செய்த பிறகு 500 டாலர் மதிப்புள்ள் பணிக்கு 20 சதவீதம் வரை அப் வொர்க் கட்டணமாக வசூலிக்கும். இதுவே 501 டாலர் முதல் 10 ஆயிரம் டாலர் வரையிலான பணிகளுக்கு 10 சதவீதம் கட்டணமாக வசூலிக்கும். 10 ஆயிரம் டாலருக்கும் அதிகமான பணிகளுக்கு 5 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கும்.

ஃபைவர் (Fiverr)
Fiverr ஆனது எழுத்தாளர்கள், கிராஃபிக் வடிவமைப்பாளர்கள் மற்றும் மென்பொருள் உருவாக்குநர்கள் போன்ற நிபுணர்களுக்கு ஃப்ரீலான்சிங் பணிகளைக் கண்டறிய உதவுகிறது. $5 முதல் $150 வரை கமிஷனாக வசூலிக்கிறது.
Fiverr கணக்கை இலவசமாகத் தொடங்கலாம். சேவை வழங்குநர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு கட்டணங்களில் தங்கள் சேவைகளைப் பட்டியலிடலாம். தனிப்பட்ட சேவை வழங்குநர்களின் மதிப்புரைகள் மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் இந்தத் தளம் தரவரிசைப்படுத்துகிறது.

குரு (GURU)
குரு, ஃப்ரீலான்ஸர்களுக்கு வேலையை பெறு பெரும் அளவில் உதவி வருகிறது. ஒவ்வொரு வேலைக்கும் 2.9 சதவீதம் கட்டணம் வசூலிக்கிறது.
இயங்குதளத்தின் டாஷ்போர்டானது, தற்போதைய திட்டங்கள், நிலுவையில் உள்ள திட்டங்கள், நிலுவையில் உள்ள பயன்பாடுகள், காலக்கெடு போன்றவற்றைக் கண்காணிக்க வல்லுநர்களை அனுமதிக்கிறது.

ஃப்ரீலான்ஸர் (Freelancer)
ஃப்ரீலான்ஸர் என்பது வாடிக்கையாளர்கள் ஒரு ஃப்ரீலான்ஸ் பணிகளை ஏலம் எடுக்கக்கூடிய ஒரு தளமாகும். 3 சதவீதம் கமிஷன் வசூலிக்கிறது.
ஃப்ரீலான்ஸர்கள் பிளாட்ஃபார்மில் இலவசமாகப் பதிவு செய்து, தங்கள் பணி விவரத்தைப் பதிவேற்றிய பிறகு கணக்கை உருவாக்கலாம்.

பீப்பள் பர் ஹவர் (People per hour)
பெயர் குறிப்பிடுவது போல, இந்த ஃப்ரீலான்சிங் தளம் ஒரு மணிநேர அடிப்படையில் வேலை வழங்குகிறது. இது ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையேயான ஆப்ஸ் மெசேஜிங் அம்சங்களையும் கொண்டுள்ளது. 5 முதல் 20 சதவீதம் கமிஷன் வசூலிக்கிறது.
Top 5 Best Frelance Work Websites
Top 5 Best Frelance Work Websites | ஃப்ரீலான்ஸ் மூலம் கூடுதலாக பணம் சம்பாதிக்க விருப்பமா? இதோ உங்களுக்கான 5 பிரபல இணைய தளங்கள்!