தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் புதிய தலைவர் சிரேஷ்ட பேராசிரியர், மலிக் ரணசிங்க கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் (UoM) சிவில் பொறியியலில் சிரேஷ்ட பேராசிரியரும், பட்டய பொறியாளரும் சர்வதேச தொழில்முறை பொறியாளரும் இலங்கையின் தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினரும்,இலங்கை திட்ட முகாமையாளர் நிறுவனத்தின் உறுப்பினரும் இலங்கை பணிப்பாளர்கள் நிறுவனத்தின் பட்டதாரி உறுப்பினரும் ஆவார்.
பேராசிரியர் ரணசிங்க மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆகவும் ,சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உறுப்பினர் ஆகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஆகவும் மற்றும் தேசிய ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பொதுநலவாய பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் (ACU) முன்னாள் பேரவையின் உறுப்பினர் ஆகவும் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.