ஆப்பிள் ஐபோன் 14 நேற்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த புதிய போன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்து வருகின்றன.
பெரும்பாலான ஐபோன் பயனாளிகள் இந்த புதிய மாடலுக்கு தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஸ்டீவ் ஜாப்ஸ் மகள் ஈவ் ஜாப்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீம் ஒன்றை பதிவு செய்து இருப்பது அவரும் இந்த மாடலை கேலி செய்து இருப்பது போல் தோன்றுகிறது என நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
வழிக்கு வந்தது ஆப்பிள்.. ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டிய கோட்டையை காப்பாற்ற புது முயற்சி..!

ஆப்பிள் ஐபோன் 14 அறிமுகம்
ஆப்பிள் ஐபோன் 14 நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இந்த போனுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முந்தைய மாடல்களை போல் ஆப்பிள் ஐபோன் 14 மாடலிலும் புதுமை இல்லாததால் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஈவ் ஜாப்ஸ்
இந்த ஆண்டு, ஐபோன் 14 க்கு எதிரான விமர்சனத்தில் மறைந்த ஆப்பிள் இணை நிறுவனர் மற்றும் CEO ஸ்டீவ் ஜாப்ஸின் மகள் ஈவ் ஜாப்ஸ் அவர்களும் இணைந்திருப்பதுதான் ஆச்சர்யம்.

ஈவ் ஜாப்ஸ் மீம்
24 வயதான ஈவ் ஜாப்ஸ், புதிய ஐபோன் 14 குறித்து மீம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். அதில் ஒரு மனிதர் ஏற்கனவே அணிந்திருக்கும் சட்டையை ஒத்த ஒரு ஒரு சட்டையை உயர்த்தி பிடிக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவில் நான் ஐபோன் 13 இலிருந்து ஐபோன் 14 க்கு சென்றுள்ளேன் என்றும் பதிவு செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டீவ் ஜாப்ஸ்
ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் 2011ஆம் ஆண்டு இறக்கும் வரை ஆப்பிள் உலகின் மிக மதிப்புமிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது. ஐபோன் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டிங் துறைகளை மாற்றியமைத்த பெருமை அவருக்கு உண்டு. ஆனால் பல ஆப்பிள் ரசிகர்கள் அவரது மரணத்திற்கு பிறகு ஆப்பிள் நிறுவனத்தில் புதுமை நிறுத்தப்பட்டதாக கருதுகின்றனர்.

ஆப்பிள் ஐபோன் 14 விலை
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன், ஐபோன் 14, அடிப்படை மாடலின் விலை $799 என்றும், பிரீமியம் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் விலை $1,100 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐபோன் 14 விலை
இந்தியாவில் ஐபோன் 14 விலையானது அடிப்படை 128ஜிபி மாடல் ரூ.79,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஐபோன் 14 பிளஸ் மாடல் விலை ரூ.89,900 என்றும், ஐபோன் 14 ப்ரோ மாடலின் விலை ரூ.1,29,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1,39,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Steve Jobs’ daughter just took a dig at the new iPhone 14
Steve Jobs’ daughter just took a dig at the new iPhone 14