Kanam Review: அமலா அக்கினேனி, ஷர்வானந்த் நடித்துள்ள டைம் டிராவல் பாசக் கதை.. கணம் விமர்சனம் இதோ!

நடிகர்கள்: ஷர்வானந்த், அமலா அக்கினேனி, ரிது வர்மா

இசை: ஜேக்ஸ் பிஜோய்

இயக்கம்: ஸ்ரீகார்த்திக்

Rating:
3.5/5

சென்னை: அதிகரித்து வரும் ஆயுத கலாச்சார படங்களுக்கு மத்தியில் இப்படியொரு அம்மா சென்டிமென்ட் படங்கள் ரசிகர்களை ஆசுவாசப்படுத்துகின்றன.

இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் அமலா அக்கினேனி, ஷர்வானந்த், ரிது வர்மா, ரமேஷ் திலக், சதீஷ் மற்றும் நாசர் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள கணம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இன்று நேற்று நாளை படத்தை போல டைம் மெஷின் கான்செப்ட்டில் உருவாகி உள்ள இந்த படம் எந்த இடத்தில் வேறுபட்டு ஸ்கோர் செய்கிறது என்பதை இங்கே பார்ப்போம்..

கணம் கதை என்ன

சிறு வயதில் விபத்தில் தனது அம்மாவை இழக்கும் ஆதிக்கு (ஷர்வானந்த்) டைம் டிராவல் மூலம் மீண்டும் தனது அம்மாவை (அமலா அக்கினேனி) சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. எதிர்பாராத அந்த மரணத்தில் இருந்து தனது அம்மாவை காப்பாற்றுகிறாரா? இல்லையா? என்பது தான் கணம் படத்தின் கதை. டைம் டிராவால், சயின்ஸ் ஃபிக்‌ஷன் என வேறு கதைக்குள் செல்லாமல் மகனுக்கும் அம்மாவுக்கான பாசத்தை மட்டுமே இயக்குநர் மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி உள்ளார்.

திருச்சிற்றம்பலம் படத்தை போல

திருச்சிற்றம்பலம் படத்தை போல

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் ஓப்பனிங் காட்சியிலும், சாலையில் சென்று கொண்டிருக்கும் கார் அப்பாவின் கவனக்குறைவால் விபத்தில் சிக்கி அம்மா, தங்கை உயிரிழப்பார்கள். அப்பா பிரகாஷ் ராஜுக்கும் தனுசுக்கும் ஆகாது. அதே போலவே இந்த படத்திலும், ஆரம்பத்தில் ஒரு கார் விபத்து நடக்கிறது. அதில், தனது தாயை இழக்கிறான் ஹீரோ, அப்பாவிடம் இவனும் பேசுவது கிடையாது. ஆனால், அந்த கம்பேரிசன் இங்கேயே முடிவடைகிறது. மீண்டும் தனது அம்மாவை சந்திக்க கிடைக்கும் வாய்ப்பை, சர்வானந்த் எப்படி பயன்படுத்திக் கொள்கிறான் என்கிற கோணத்தில் விரியும் கதை ரசிகர்களுக்கு இன்னொரு ஃபீல் குட் மூவியை பார்க்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறது.

டைம் டிராவல்

டைம் டிராவல்

விஞ்ஞானி ரங்கி குட்டப்பால் (நாசர்) 20 ஆண்டுகளாக போராடி கண்டுபிடித்த டைம் மெஷினில் நாயகன் ஆதியை பயணம் செய்ய அனுமதிக்கிறார். ஆனால், ஒரு கண்டிஷனோடு! நாயகன் அவன் மட்டும் செல்லாமல், தனது நண்பர்களான சதீஷ் மற்றும் ரமேஷ் திலக்கை உடன் அழைத்துச் செல்கிறார். அந்த இருவருக்கும் ஒரு சூப்பர் பேக் ஸ்டோரி அமைத்த இடத்தில் இயக்குநர் ஸ்கோர் செய்துள்ளார்.

அம்மாவாக அமலா

அம்மாவாக அமலா

விபத்தில் உயிரிழந்த தனது அம்மாவை மீண்டும் சென்று சந்திக்கும் அந்த கணம் நெஞ்சை பிழிகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடித்துள்ள அமலா சரியான கம்பேக் கொடுத்துள்ளார். தனது சின்ன வயது கேரக்டரை ஹீரோ மற்றும் அவரது நண்பர்கள் சந்திப்பது, அவர்களின் மூலம் தங்களின் எதிர்காலத்தை நல்லபடியாக மாற்ற முயற்சிக்கும் காட்சிகள் எல்லாம் சூப்பர்.

பலம்

பலம்

அமலா, சர்வானந்த் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைகிறது. நாயகி ரிது வர்மா குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவான நடிப்பைத் தந்துள்ளார். இயக்குநரின் ஸ்க்ரீன் பிளே மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் நல்லாவே வொர்க்கவுட் ஆகி உள்ளது. எடுத்துக் கொண்ட கதையில் கடைசி வரை சரியாக பயணிப்பது மற்றும் இடைவேளை முடிந்து வரும் அந்த ட்விஸ்ட், கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும் என கெஸ் செய்து உட்கார்ந்திருந்தால், வேறு ஒரு கிளைமேக்ஸ் என ஏகப்பட்ட பிளஸ்கள் உள்ளன.

பலவீனம்

பலவீனம்

90ஸ் நாஸ்டால்ஜியா காட்சிகள், அந்த நிர்மா சோப்பு விளம்பரம் மட்டும் தானா? என கேள்விக் கேட்கத் தூண்டுகிறது. டைம் டிராவல் கதையில் லாஜிக்கை எல்லாம் பார்க்காமல், சென்டிமென்ட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருப்பது சில இடங்களில் நெருடலை ஏற்படுத்துகிறது. அடிக்கடி வரும் பாடல்கள் கதையை சற்றே ஸ்லோ டவுன் செய்கிறது உள்ளிட்ட சில குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் கணம் ரொம்ப நல்லாவே இருக்கு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.