பொதுவாக கொழுப்பின் காரணமாகவே நமக்கு தொப்பை ஏற்படுகிறது. பலர் உணவை அதிகமாக உண்கிறோம்.
ஆனால் குறைவாக வேலை செய்கிறோம்.
அதுமட்டுமின்றி பலரும் வீட்டிலேயே அமர்ந்து பணிப்புரிந்து வருவதால் அவர்களுக்கு வயிற்றில் கொழுப்பு அதிகமாவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
இவற்றை எளியமுறையில் கூட குறைக்கலாம். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.
- நீங்கள் ஒரு ஸ்பூன் தேனை அரை கிளாஸ் சாதாரண அதாவது சூடு இல்லாத தண்ணீரில் கரைத்து காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிட, வயிறு குறைந்து விடும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.
- முள்ளங்கீரை உணவில் சோத்துக் கொள்ளலாம் ஆமணக்கு வேரை நன்றாக இடித்து தேன் கலந்து பிசைந்து சிறிது தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் நீரை வடிகட்டி தினமும் அரை தம்ளர் குடித்து வர இடுப்பு பக்கம் அதிகரித்து சதை குறையும்.
- பிரண்டை தண்டுகளை ஒடித்துவந்து அதன் மேல் தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக்கி வேக வைத்து அதனை காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும் இந்த பொடியுடன் ஒரு தேக்கரண்டி இந்துப்பு ஐந்து எலமிச்சம் பழச்சாறு சோத்து மறுபடியும் உலர்த்தி எடுத்தக் கொள்ள வேண்டும்.
-
தினசரி அதில் அரை தேக்கரண்டி பொடியை உணவுடனோ உணவுக்கு முன்பு தண்ணீரிலோ கலந்து சாப்பிட உடல் பருமன் குறையும். பெண்களுக்கு உண்டாக்கும் பின்னிடுப்பு வலியும் சரியாக்கும்.