பிக்பாஸ் சீசன் 6..காடுன்னு ஒன்னு இருந்தா ராஜான்னு ஒருத்தன்..மிரட்டும் கமலின் ப்ரமோ

பிக்பாஸ் சீசன் 6 அக்டோபரில் தொடங்குகிறது. கமல்ஹாசனே இதை தொகுத்து வழங்க உள்ளார் அதற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 க்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. முற்றிலும் புதிய கதைக்களம், புதிய இடத்தில் மிரட்டலாக வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் கோட்டைப்போன்ற இடத்தில் வந்து தனது கம்பீர குரலில் மிரட்டலாக பேசுகிறார்.

உலகம் முழுவதும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி

அமெரிக்க தொலைக்காட்சிகளில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் நூறுநாள் அவர்கள் அவர்களாகவே ஒரு வீட்டிற்குள் வாழவேண்டும். அவர்களுடைய நடவடிக்கைகள் அங்குள்ள கேமராக்கள் மூலம் பொதுமக்கள் காண ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றதை அடுத்து இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தொடங்கி தற்போது தென் இந்திய மொழிகள் அனைத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழில் விஜய் தொலைக்காட்சி நிறுவனம், எண்டோஸ்மால் நிறுவனம் இணைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்கி ஐந்து சீசன்கள் நடத்தி முடித்து விட்டனர்.

பிக்பாஸ் 6 வது சீசன் தொடங்க உள்ளது

பிக்பாஸ் 6 வது சீசன் தொடங்க உள்ளது

தற்போது 6 வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை சீசன் ஒன்று முதல் தொகுத்து வரும் நடிகர் கமல்ஹாசன் சீசன் 6 ஐயும் தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான ப்ரமோ சில நாட்களுக்கு முன் வெளியானது. கமல்ஹாசன் நிகழ்ச்சியை நடத்துவதால் பிக் பாஸ் நிகழ்ச்சி பொதுமக்களிடையே பெரிய அளவில் சென்று சேர்ந்தது. வாரத்தில் இரண்டு நாட்கள் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது அவர் பேசும் வார்த்தைகள், சொல்கின்ற விஷயங்களுக்காக ஒரு ரசிகர் கூட்டம் உண்டு.

உலகமே உங்களை இனி உற்று நோக்கும்

உலகமே உங்களை இனி உற்று நோக்கும்

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று செல்பவர்களிடம் கமல்ஹாசன் உங்களுக்கு இனி புதிய வாழ்க்கை அமையும் என்று சொல்வார். அதேபோல் பலருக்கும் வாழ்க்கை அமைந்துள்ளது. இந்த முறை தாமரை, ராஜு, அமீர், பாவனி, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலருக்கும் நல்ல அறிமுகம் கிடைத்தது. பலரும் திரைத்துறையில் சம்பாதிக்கின்றனர், இது தவிர விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி களில் தொடர்ந்து பங்கேற்பதன் மூலம் அவர்கள் வாழ்க்கைக்கு ஒரு நிலையான வருமானம் கிடைத்து வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 ல் இவர்களா?

பிக்பாஸ் சீசன் 6 ல் இவர்களா?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்பதில் இம்முறை பொதுமக்களையும் அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டு தேர்வு நடந்து வருகிறது. ஓரிருவர் பங்கேற்க வாய்ப்புள்ளது. இது தவிர சீசன் 6-ல் பங்கேற்போர் உத்தேச பட்டியல் வெளியானது ஆனால் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனாலும் டிடி, தமன் மனைவி உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்பதாக சொல்கிறார்கள்.

புது ப்ரமோவில் மிரட்டும் கமல்

புது ப்ரமோவில் மிரட்டும் கமல்

இந்நிலையில் தற்போது புது ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் கோட்டைப்போன்ற ஒரு இடத்துக்குள் வரும் கமல் மிரட்டலான குரலில் வீடு என்று ஒன்றிருந்தால் போட்டி என்று ஒன்று இருக்கும். அந்த போட்டி ஒரு கட்டத்துல வேட்டையாக மாறி சிலர் மான் மாதிரி துள்ளி குதிப்பாங்க சிலர் புலி மாதிரி பதுங்கி பாய்வார்கள். சிலர் பாம்பு மாதிரி சீற பார்ப்பாங்க, சிலர் காத்திருப்பாங்க கழுகு மாதிரி, சிலர் யானை மாதிரி மிரள வைப்பாங்க, முதலை மாதிரி மூர்க்கமா இருப்பாங்க, சிலர் நரி மாதிரி திட்டம் தீட்டுவாங்க முயல் மாதிரி மாயமாவாங்க, ஆனால் சிலர் ஆள நினைப்பார்கள் சிங்கம் மாதிரி.

முகபாவங்களை வெளிப்படுத்தும் கமல்

முகபாவங்களை வெளிப்படுத்தும் கமல்

காடுன்னு ஒன்னு இருந்தா ராஜான்னு ஒருத்தர் தானே இருக்க முடியும். ஆனால் இந்த வீட்டில் கடைசியா யார் இருக்கப்போறதுன்னு முடிவு பண்ண போறது அவங்க இல்லை நீங்கதான்” அப்படின்னு முடிக்கிறார். ஒவ்வொரு வசனம் மிருகங்களைப்பற்றி பேசும்போது வரும் விலங்குகளுக்கு ஏற்றாற்போல் முகபாவங்களையும், பாவங்களை மாற்றுகிறார்கமல், அவர் பேசும்போது பின்னணியில் அவர் சொல்லும் மிருகங்களின் உருவம் நிழலாக மிரட்டுகிறது. மிரட்டலான இந்த ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.