மும்பை : ஹீரோக்கள் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பார்கள் என்று தீபிகா படுகோனே கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தீபிகா படுகோனே இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவருடைய நடிப்புக்கு மட்டுமல்ல, இவரின் மந்திர சிரிப்பும் மயக்கும் அழகுக்கும் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
நடிகை தீபிகா பத்மாவதி திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கிசுகிசுக்களில்
நடிகை திருமணத்திற்கு பின்பும் திருமணங்களில் தொடர்ந்து நடித்து வரும் தீபிகா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ரன்பீர் சிங்கை எப்படி காதலித்தேன், எப்படி திருமணம் செய்து கொண்டேன் என்று தெரியவில்லை. மேலும், ஹீரோக்கள் அடிக்கடி பல்வேறு கிசுகிசுக்களில் சிக்குவார்கள் அதுமட்டுமில்லாமல், உடல் ரீதியாக வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பார்கள் என்பதால், நான் ஹீரோவை கட்டாயம் கல்யாணம் பண்ணக்கூடாது என உறுதியாக இருந்தேன்.

உண்மையான காதல்
பல ஆண்டுகளாக என்னுடன் நட்பாக இருந்தவர்கள் கூட என்னை ஏமாற்றிவிட்டு போனார்கள். இந்த வலியுடன் மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் எனவிரும்பினேன். பல நேரம் தனிமையில் இருந்தேன். ஆனால், ரன்வீர் அறிமுகம் என் எண்ணத்தை மாற்றிவிட்டது. உண்மையான காதலை நம்பினேன் திருமணம் செய்து கொண்டோம் திருமணம் மரியாதையை அதிகரித்துள்ளது.

சலசலப்பு
இது எல்லாம் மேஜிக் போல் உணர்கிறேன். இப்போது நான் உங்கள் முன் நின்று இதைப்பற்றி பேசுவதற்கு ரன்பீரின் காதலும், அன்பும் தான் காரணம் என்று அந்த பேட்டியில் தீபிகா கூறியுள்ளார். இவர் என்னத்தான் தனது கணவரை பாராட்டி பேசினாலும், ஹீரோக்கள் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பார்கள் என்று தீபிகா படுகோனே கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜவான் படத்தில்
தீபிகா படுகோனே தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதே போல, புராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அமிதாப்பும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.