சேலம்:
சேலத்தில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி விஜயராகவாச்சாரியார் ஹாலில் நேற்று நடைபெற்றது. மிஸ்டர் தமிழ்நாடு-2022 என்ற தலைப்பில் நடந்த இந்த ஆணழகன் போட்டியில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் ஆர்முடன் கலந்து கொண்டனர். மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, சூரமங்கலம் சரக உதவி கமிஷனர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ஆணழகன் போட்டியை தொடங்கி வைத்தனர்.
இதில், 23-வயதுக்கு உட்பட்டவர்கள், 23-வயதுக்கு மேற்பட்டவர்கள், 172 மீட்டர் உயரம் கொண்டவர்கள், 40-வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்பட 5 பிரிவுகளாக ஆணழகன் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஆர்வமுடன் கலந்து கொண்ட இளைஞர்கள் தங்களது திறமைகளை பார்வையாளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினர். முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராஜேஸ், மணிகண்டன், சரவணன் ஆகியோர் செய்தினர்.