சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்வதற்கு உதவிய ஐவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாழைசேனை விசேட அதிரடி முகாம் அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் எல்லை பகுதிக்கு உட்பட்ட கரையோர பகுதியில் நேற்று (12) முற்றுகை மேற்கொள்ளப்பட்டன. இதன்போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன். இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு படகு மூலம் போக்குவரத்து வசதி செய்தமைக்காக கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்களது ஐந்து டிங்கி படகுகளை விசேட அதிரடிப்படையினர் பொறுப்பேற்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா வரை செல்வதற்கு ஒரு நபரிடம் 10 இலட்சம் ரூபா வரை பணம் அறவிட்டதாக சந்தேக நபர்களை விசாரணைக்குட்டபடுத்திய போது தெரியவந்துள்ளது.