சென்னை
:
நடிகர்
அஜித்குமார்
நடிப்பில்
உருவாகிவரும்
ஏகே61
படத்தின்
சூட்டிங்,
ஐதராபாத்,
விசாகப்பட்டினம்
போன்ற
இடங்களில்
நடந்து
முடிந்துள்ளது.
ஹெச்
வினோத்
-போனிகபூர்
கூட்டணியில்
இந்தப்
படத்திற்காக
3வது
முறையாக
இணைந்துள்ளார்
அஜித்குமார்.
இந்நிலையில்
இந்தப்
படத்தின்
சூட்டிங்
அடுத்ததாக
பாங்காக்கில்
நடைபெறவுள்ளதாக
தகவல்கள்
வெளியாகியுள்ளன.
நடிகர்
அஜித்
நடிகர்
அஜித்
தன்னுடைய
நேர்கொண்ட
பார்வை,
வலிமை
படங்களை
தொடர்ந்து
ஹெச்
வினோத்
இயக்கத்தில்
போனிகபூர்
தயாரிப்பில்
மூன்றாவது
முறையாக
இணைந்துள்ள
படம்
ஏகே61.
இந்தப்
படத்தில்
வில்லன்,
ஹீரோ
என
இருவேறு
கெட்டப்புகளில்
அஜித்
நடித்துவரும்
நிலையில்,
இந்தப்
படத்தின்
சூட்டிங்
முதலில்
ஐதராபாத்தில்
பிரம்மாண்டமான
செட்
போடப்பட்டு
நடத்தப்பட்டது.

பொங்கல்
ரிலீஸ்?
இதையடுத்து
விசாகப்பட்டினத்திலும்
படத்தின்
சூட்டிங்
நடைபெற்றது.
படம்
முன்னதாக
தீபாவளி
ரிலீஸ்
என
கூறப்பட்டது.
தொடர்ந்து
தற்போது
பொங்கலையொட்டி
படம்
ரிலீசாக
உள்ளதாக
கூறப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு
விஜய்யின்
வாரிசு
படமும்
ரிலீசாக
உள்ள
நிலையில்
ஏகே61
படத்திற்கான
எதிர்பார்ப்பு
அதிகரித்துள்ளது.

தள்ளிப்போகும்
சூட்டிங்
எப்போதும்
தான்
நடிக்கும்
படங்களை
முடித்துக்
கொடுத்துவிட்டுத்தான்
தன்னுடைய
தனிப்பட்ட
திட்டங்களை
நடிகர்
அஜித்
மேற்கொள்வார்.
இதனிடையே,
படத்தின்
சூட்டிங்கிலிருந்து
அவ்வப்போது
இடைவெளி
எடுத்துக்
கொண்டு,
பிரிட்டன்,
தற்போது
லடாக்
என்று
சுற்றி
வருகிறார்.
இந்தப்
பயணங்களின்போது
அவர்
தன்னுடைய
பைக்
ரைடையும்
செய்து
அனைவரையும்
கவர்ந்துள்ளார்.

நிதி
நெருக்கடியால்
தாமதமாகிறதா?
இதனிடையே
இந்தப்
படத்தின்
சூட்டிங்
நிதி
நெருக்கடி
காரணமாகத்தான்
தள்ளிப்
போவதாக
தகவல்கள்
வெளியாகி
வருகின்றன.
முன்னதாக
இந்தப்
படத்தின்
சூட்டிங்
பூனாவில்
நடைபெறவுள்ளதாக
தகவல்கள்
தெரிவித்தன.
ஆனால்
படத்தின்
சூட்டிங்
விசாகப்பட்டினத்தில்
நடைபெற்றது.

பாங்காக்கில்
சூட்டிங்
இந்நிலையில்
இந்தப்
படத்தின்
அடுத்தக்கட்ட
சூட்டிங்
பாங்காக்கில்
வரும்
15ம்
தேதி
முதல்
துவங்கவுள்ளதாகவும்
இதற்காக
படக்குழு
விரைவில்
பாங்காக்
செல்லவுள்ளதாகவும்
அங்கு
3
வாரங்கள்
தொடர்ந்து
சூட்டிங்
நடக்கவுள்ளதாகவும்
தகவல்கள்
வெளியாகியுள்ளன.
இதனிடையே
இந்தப்
படத்தின்
டைட்டிலையாவது
வெளியிடுங்கப்பா
என்று
தொடர்ந்து
போனி
கபூரிடம்
அஜித்
ரசிகர்கள்
கோரிக்கை
வைத்து
வருகின்றனர்.

விரைவில்
பாங்காக்
பயணம்
இந்தப்
படத்தில்
மஞ்சு
வாரியர்
உள்ளிட்டவர்கள்
அஜித்துடன்
இணைந்து
நடித்துவரும்
சூழலில்
அவர்களும்
பாங்காக்
பயணத்தில்
அஜித்துடன்
இணையவுள்ளதாக
தகவல்கள்
வெளியாகியுள்ளன.
விரைவில்
படத்தின்
சூட்டிங்கை
முடித்து
பொங்கலில்
ரிலீஸ்
செய்யுமாறு
ரசிகர்கள்
தொடர்ந்து
கேட்டு
வருகின்றனர்.